வண்ணங்களை குழைத்து இறைவன் வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை !எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள் அர்த்தமுடன் புதைகின்ற பொன்வேளை ! கற்பனையின் ஆழத்தை கடலோடு ஒப்பிட்டு கண்ணீரின் சுவையால் கடலுக்கு உப்பிட்டுபற்றற்ற வாழ்கையின் விடியலைத் தேடி புதைகின்றேன் ; கடற்கரை மணற் மேட்டில் : இறந்த காலத்தை மீட்டும் எண்ணவலைகள் இனியொரு வசந்தம் வருமா? என்றே ஏங்கும்!பறக்கத் துடிக்கும் பாழும் மனச்சிறகுகள் பற்றிசை நோக்கி சிறகை விரிக்கும் , பறக்கும். நிழல் கூட நிஜமே என்று எண்ணத் தோன்றும் ; நான் நடந்தால் கூடவர நிழலும் மறுக்கும் !உழல்கின்ற என் மனதில் சுதி மீட்டும் ராகங்கள் உரிமையுடன் தீண்டும் தென்றல் ; புதுராகம் ! பரிபாஷை பேசும் பறவைகள் வேண்டாம் புரிகின்ற ஒரு பாஷை போதும் ; இயற்கையில்புரியாத எண்ணங்கள் உயிருக்குள் பூப்பூக்கும் ! புரிகின்ற போதே கல்லறைக்குள் உடல் தூங்கும் ! ஈழம்கவிதைமரபு Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 290 views
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162