nksonline's படம்

தூரம் அதிகமில்லை !

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ?
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து சிறையில் அடைக்க
அரசினால் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டையது மறந்து போகும் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போகும் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

சிறந்து வழிகாட்டல்


6

சிறந்து வழிகாட்டல்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நண்பரே தங்கள் மனதின் விசனம்


6

நண்பரே தங்கள் மனதின் விசனம் புரிகின்றது, ஆனால் எல்லாம் கலந்தக் கலவையே உலகும் அதில் வாழும் நாமும்!

saravanamuthu's படம்

நல்ல வழிகாட்டல்!!!


5

நல்ல வழிகாட்டல்!!!