அன்பு என்பது தூய்மையானது
அன்பு என்பது வாய்மையானது
அன்பு உருவத்தில் தாய்மையானது
அன்பு எளிமையில் சேய்மையானது
அன்பு என்றுமே நேர்மையானது
அன்பு என்றுமே அளவில்லாதது
அன்பு என்றுமே அழிவில்லாதது
அன்பு என்றுமே பெருமை தருவது
அன்பு என்றுமே அடக்கமானது
அன்பு என்றுமே பணிந்து போவது
அன்பு என்றுமே உயர்ந்து நிற்பது
அன்பு என்றுமே நிலைத்து நிற்பது
அன்பு என்றுமே பேதம் பாராதது
அன்பு உன்னிலே கசிந்து நிற்பது
அன்பு உருகியே உயிரில் கலப்பது
அன்பைக் காட்டினால் பேருவகையாவது
அன்பு கொண்டாரிடம் உண்மையானது
அன்பு இல்லாரிடம் புன்மையானது
அன்பு தவறாமல் உறவைக் சேர்க்குமே
அன்பு எந்நாளும் வெறுமை போக்குமே
அன்பு என்றுமே மனதில் விளைந்திடும்
அன்பு என்றுமே கண்ணில் நிறைந்திடும்
அன்பு தேடியே உயிர்கள் அலைந்திடும்
அன்பு உள்ளதால் உள்ளம் இணைந்திடும்
அன்பு மனமுருகினால் அது பக்தியாகுமே
அன்பு மனமிரங்கினால் அது கருணையாகுமே
அன்பு மனமிணைந்தால் அது காதலாகுமே
அன்பு மனமகிழ்ந்தால் உயிரை வாழவைக்குமே
அன்பு வடிவிலே உன் அம்மா இருப்பாளே
அன்பைக் கொட்டியே உன்னை வளர்ப்பாளே
அன்பு இல்லாத இந்த வறண்ட உலகையும்
அன்பைப் பெருக்கியே செழிக்க வைப்பாளே
அன்பு இருப்பதாய்க் கல்லைக் கண்டாலும்
அன்பு பெருக்கெடுத்து கண்ணீர் வடிப்பாயே
அன்பின் உருவிலே இறைவன் வருவானே
அன்பின் விளக்கமாய் எங்கும் நிறைவானே
என்றும் உங்கள்:
பொன்வண்ணன்
கருத்துகள்
"அன்புக்குமுண்டோ அடைக்கும்
"அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்"
"அன்பாலே எவரையும் அடக்கலாம்"
"அன்பாலே ஆண்டவனையும் அடையலாம்"
எனப் பலர்
பலவாறு சொல்லக் கேள்விப்பட்டேன்...
அந்த
அன்புக்குப் பாவாலே ஆடைகட்டி
அழகு காட்டிய
அறிஞர் பொன்வண்ணின் பா
அன்பு பற்றிய உண்மைகளை
அப்படியே சொல்கிறதே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வணக்கம் பெரியவரே. தூய்மையான
வணக்கம் பெரியவரே.
தூய்மையான அன்பை துலக்கமாக விளக்கியுள்ளீர்கள்.

நன்றி.
இளங்கவி
வணக்கம் ஐயா.... மிகவும்
வணக்கம் ஐயா....
மிகவும் அருமை..... தமிழ் வார்த்தைகளில் மிகவும் அருமையாக அன்பின் பண்புகளை சொல்லியுள்ளீர்..... மிகவும் அருமை.... வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை.... தங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது ஐயா......

அன்புக்கு இத்தனை அர்த்தங்களா?
அன்புக்கு இத்தனை அர்த்தங்களா? அருமையான கவிதை ........நட்புடன் பரிதி










