தீப்பிடித்தபிறகு
அணைப்பதற்கு
இருக்கிறது
தீயணைப்பு ஊர்தி
அனால் நானோ.....
நீ அணைத்த பின்தான்
தீப்பிடித்தே எரிகிறேன்.....
எதோ கவலையில்
கன்னத்தில் கைவைத்து
உட்கார்த்திருக்கிறாய்
கப்பலே கவிழ்ந்தாலும்
இவ்வளவு அழகாய்
வேறு யாராலும்
கொண்டாட முடியாது...
கவலைகளை.....
அங்கும் இங்குமாக
என்னை தேடி
அலைந்துகொண்டிருக்கும்
உன் கண்களை
ரசிதுக்கொண்டிருகிறேன்
மீன்தொட்டியில்.......
நியாயமில்லாமல்
நடந்து கொள்கிறது
நியாயவிலை கடை
உன்னை
வரிசையில் நிற்கவைத்து......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் கவிழ்த்தாலும் இப்படி கவிதை சுடுவதற்கு நம்மள விட்டால் வேறு ஆள் கிடையாது.........



