rajudranjit's படம்

காலம் செய்த கோலம் "தானே"
ஞாலம் முழுதும் பலபெயரிலே
உழைத்தவன் வியர்வை மாறுமுன்னே

வாழை பயிரிட்டு குடும்பம் வாழ ஆசை
கரும்பு பயிரிட்டு மனமினிக்க ஆசை
வயிற்று சோற்றுக்கு கதிர‌றுக்க ஆசை

இயற்கை அன்னைக்கு ஏனிந்த கோபம்
உழைக்கும் வர்க்கம் செய்ததா பாவம்
ஒரு புயலெழும்ப ஊரெல்லாம் கலைந்ததே

மா சாய்ந்து மறிக்க வந்ததே துக்கம்
பலா சாய்ந்து ஏழைவிலா நோக துக்கம்
முந்திரி முறிந்ததனால் எந்திரிக்கும் காலம் எப்போது

தானா வந்ததோ சதியென தானே
உள்ளவன் மச்சி வீட்டினுள்ளே தானே
ஏழையின் ஓலைக்குடிசை பறக்க தானே

சாரமில்லா வாழ்கையிலே மின்சாரமில்லே
நடந்துபோக ஒழுங்கா பாதையில்லே
நஷ்டயீடு வாங்குவதற்கு மட்டும் வரிசையிலே

கேடுகெட்ட ஊழலுக்கு வழிவகுக்கும் தானே
அரசியல் வாதிகளுக்கு இலாபம் தரும்தானே
மக்களின் வறுமையிலே விளையாட வந்தது தானே

பிழைப்பிற்கில்லா வழியாக்கிய இயற்கை தானே
அதன்வழி சிலகுறுக்கு புத்திகள் பிழைக்க தானே
ஆண்டவன் அருளிருந்தால் வருமா தானே

வீடில்லா ஏழைக்கு என்னவழி சொல்லு
பயிரிழந்தவன் உயிர்பிழைக்க வேணும் தானே
அரசாங்கம் நல்லுதவி செய்யவேணும் தானே

இலவசமா எதை வாங்க‌ வேணும் பார்
அதற்கென வந்ததிந்த அழிவென தானே
இது புரியுமா எங்கள் மக்கள் மனதிற்கு தானே

கொள்ளையடிக்கும் கொடுமைக்கார துரைகளிருக்க‌
அல்லைநோக வயிறுசுருங்கி அடுத்தவருதவி கேட்போர்
பிறந்த மண்ணில் பிச்சைக்காரர் போலே திரியத்தானோ

இனியொரு புயல் வேண்டாம் வேண்டாம்
மக்களுழைப்பு அவதாரமெடுக்க வேண்டும் வேண்டும்
விளை நிலங்கள் விளைவதற்கு மட்டும் தானே

உழவனின் பெருமைக்கு இது உதாரணம்
பொருளில்லாத பேருக்கு உண்டாக்கிய இரணம்
தானே சரியாகாது நாமுழைக்க வெற்றி தானே

விளையா நிலங்களெல்லாம் வீடென மாற‌
விளைகின்ற பாகத்தில் வருமா இலாபம் தானே
அரசின் கையில் ஆதரவு கேட்கும் மக்கள் தானே

உழைப்பவன் வீழ்ந்துவிட்டால் வறுமை
இருப்பவன் கொடுத்துதவினால் வளமை
ஒன்றாய் சேர நாம் மனிதர்களென்பது தானே

பலவூர்கள் பயிர்கள் நாசமாக்கியது தானே
பலவுயிர்கள் பகுத்தறிவு பெற வந்தது தானே
ஒன்றுபடு உயர்ந்து நில்லென சொன்னது தானே

என்றும் : சுஷ்ருவா

6.33333
Your rating: None Average: 6.3 (3 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

மானே தேனே என்று


7

மானே தேனே என்று மகிழ்ந்திருந்த காலம்
தானே தந்தானே எனப் பாடியிருந்த காலம்
வானே மனம் கலங்க‌ மாற்றியது தானே-இந்த‌
"தானே"ப் புயல் செய்த அலங்கோலம்.

இயற்கை அன்னையின் சீற்றத்தை அழகாகப் படம்
பிடித்துக் காட்டிய நண்பர் சுஷ்ருவாவின் மனவேதனையை
இந்தக் கவிதை மூலம் அறிய முடிகின்றது.
வாழ்த்துக்கள்.

rajudranjit's படம்

ஆம் ஐயா! எமது கடலூர் மாவட்டம்


ஆம் ஐயா! எமது கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, இழக்காத மக்களும் இழப்பீடு கேட்டு போராடுகின்றார்கள், அது ஒரு கொள்ளை

பொது சேவையென அரசியல் பிரமுகர்கள் அடிக்கும் கொள்ளை ஒரு பக்கம்

ஆனால் ஒரு சீரமைக்கும் பணியும் இதுவரை சரியான முறையில் நடைமுறை படுத்தவில்லை என்று எனது நண்பர் தொலைபேசியில் உரையாடும் போது எனக்கு தெரிவித்தார்,

நன்றி!

joshi2010's படம்

அருமையான கவிதை நண்பரே.....


6

அருமையான கவிதை நண்பரே..... "தானே" புயலின் சோகத்தை ஒரு முறை உணர்ந்து விட்டோம் தங்கள் வரிகளில்......

அரசு முடிந்தவரை மிக விரைவாக மீட்புப் பணிகளை செய்தால் மக்கள் வாழ வழி வகுத்து கொடுத்தால் மிகவும் நலம்........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

நன்றி நண்பரே! நம்புவோம் அரசை!


நன்றி நண்பரே! நம்புவோம் அரசை!

yarlpavanan's படம்

நண்பர் பாரதிராசா மூலம்


6

நண்பர் பாரதிராசா மூலம் "கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது" என்பதை அறிந்தேன். இயற்கையின் விளையாட்டில் கடற்கோளும் சூறவளியும் முதலிடம் தான். இயற்கையின் பிடியிலிருந்து தப்பியவர்களுக்குத் தன்னம்பிக்கை தான் முதலாம் முதலீடு. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

இவ்வளவு வந்தும் திருந்த


இவ்வளவு வந்தும் திருந்த மாட்டேனென்கின்றார்களே அன்பரே! ஒரு பக்கம் கோபமாயிருக்கின்றது, இன்னொரு பக்கம் அப்பாவிகளின் இழப்பு கண்டு வேதனை!