புத்தன் காந்தி வாழ்ந்த வளமிக்க நாடு
சித்தன் சிந்தனை துளிர்த்த தலைசிறந்தநாடு
அப்பன் அம்மை புகழ் விளங்கிய திருநாடு
செழுமையெல்லாம் கொண்ட எங்கள் பாரதநாடு
தன்மானச் சிங்கங்கள் இருந்தநாடு
எதிரி என்றால் திருப்பியடிக்கும் நாடு
நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்தநாடு
ஓடு ஏந்தியவனை லட்சாதிபதியாக்கும் நாடு
ஒற்றுமையின் எடையை விலைபேசிய நாடு
வயிற்றை வளர்த்து புத்தியை மழுங்க வைத்தநாடு
வெகுமானம் இழந்து பெருமைக்கு கைகுலுக்கும்நாடு
வீரம் என்பது விலை போனத் திருநாடு
தன் குடிகாரக் குடிமகன்களை பெருக்கியநாடு
நாட்டு குடியுரிமையாளரை அவமதிக்கும் நாடு
ஈனம் கெட்ட அரசியலால் அலியான நாடு
பலியான தன் மக்களைப் பற்றி கவலைக் கொள்ளாநாடு
கேடுகெட்ட கோடாறிகள் ஆளும்நாடு
பாடுபட்டு உழைக்கின்றவரை வருத்தும் நாடு
சட்டங்கள் பாதை மாறிப்போன பாழ்நாடு
நரகம் எங்கென தேடாமல் உலகார் கூறும் ஒருநாடு
வெட்கம் கெட்ட வெறும்நாரிகள் உள்ளநாடு
தன் மக்களை போற்றத் தெரியா மந்திகள் உலவும்நாடு
மீனவச்செல்வங்கள் மறிக்க எதிரியின் விருந்து ருசிக்கும்நாடு
பருந்தின் எண்ணம் அறியாமல் வணங்கும் நாடு
கவிதையென நான் எழுத காரணமானநாடு
நான் பிறந்து தவழ்ந்த என் தாய்த்திருநாடு
என்மக்களை எதிரிக்கு பலிகொடுக்கும் பாதகநாடு
அறம் தெரியா அற்பர்கள் ஆளும் இந்தியநாடு
நாங்கள் கைகூப்பி தொழுத புண்ணியபூமி என் திருநாடு
அன்னியனிடம் எம்மக்கள் கைதொழ செய்தநாடு
மனம் துடிக்க உடல்நடுங்க வைக்கின்றநாடு
நாங்கள் துதிபாடி புகழ் கூறி மகிழ்ந்திட வேண்டிய நாடு
எம் நாட்டு ஆளுமைகளின் தவறுகளால் தலைகுனிந்தநாடு
பணத்திற்கு வாக்களித்த படுபாவிகள் உலவும்நாடு
தான்கொழுக்க அடுத்தவர் கால்பிடிக்கும் அவலமாம் என்நாடு
மனம் வெந்த எனக்கு இதுதான் இயலும் என் தாய்நாடே!
[எமது இந்திய மீனவர்களின் அவலத்திற்கு ஒரு தீர்வு இதுவரை எட்டப்படாமலும் அம்மீனவர்களின் உழைப்பிற்கும் பிழைப்பிற்கும் உத்தரவாதம் அளித்து காக்க வேண்டிய இந்திய அரசு, அரசியல் இராஜதந்திர முறைகளில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு அவற்றை சரி செய்ய தன் மக்களை பலிகடா ஆக்குவதை நினைத்து மன வேதனையினாலும் எனது எண்ணத்தை கவிதையாக பதிந்துள்ளேன், என்னால் இது மட்டும் தான் இயலும் அப்பாவி மீனவச்செல்வங்களை வாழவைக்க அரசு ஒரு நல்ல முடிவை எடுத்தால் எம்மை ஆளும் அரசுக்கு கோடி புண்ணியம், நடக்குமா?]
என் இந்திய மக்களே இக்கவிதை தவறாக இருப்பினும் என் மனதின் எண்ணத்தை மட்டுமே பதிந்துள்ளேன் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியது இருக்காது என்று நினைக்கின்றேன்!
என்றும்: சுஷ்ருவா!
கருத்துகள்
கவிஞரின் மனக் குமுறல்
கவிஞரின் மனக் குமுறல் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. பிளவுபடாத ஒற்றுமை இருந்தால் மக்கள் எதையும் சாதிக்கலாமே.
இந்துமா கடலுக்குத் தெரியும்
இந்துமா கடலுக்குத் தெரியும் தானே
மீனவர் வாழ்வும் சாவும் பற்றி...
உலகம் சொல்லியும் ஆள்வோர் நினைவில்
தமிழன் வாழவழி அமையாதது ஏன்?
பாவலர் சுஷ்ருவா பாட்டில் காட்டும்
உள்ளக் குமுறல் எமக்குப் புரிகிறது...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil





