பட்டினியால் தினமிங்கு வாடிப் - பலர்
பரிதவிக்கிறார் உணவினைத்தேடி
கொட்டம் அடிக்குது ஒரு கூட்டம் - அது
கொலு பொம்மையாய் இருப்பதில் - பெருநாட்டம்.
இம்மென்றால் இருட்டறை வாசம் - மீறி
ஏனென்றிடில் உயிர் நாசம்
பொம்மையா நீ இங்கு சொல்லு - அந்தப்
பொய்யரைப் பாடையில் அள்ளு.
சுற்றியே நிக்குது பேய்கள் - மண்ணைச்
சுடலை மேடாக்குது தீகள்
முற்றுகைக்குள் எங்கள் மூச்சா? - உயிர்
பெற்ற சுதந்திர வீச்சா?.
"இந்தக் கவிதைக்கு நான் தலைப்பு வைக்கவில்லை நண்பர்களே நீங்க வைங்க..."
—
"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
தோழி.
கருத்துகள்
: உயிரும் வாடை அடிக்குது
:
உயிரும் வாடை அடிக்குது இங்கே
"சுவாசமே போராட்டம்"
"சுவாசமே போராட்டம்"
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
" சுதந்திர தாகம்"
" சுதந்திர தாகம்"
சந்துரு
முற்றுகைக்குள் எங்கள் மூச்சா?
முற்றுகைக்குள் எங்கள் மூச்சா? - உயிர்
பெற்ற சுதந்திர வீச்சா?.
பாரதியை ஒத்தக் கவிவீச்சு..
புலியை முறத்தினாலே
புரட்டி எடுத்தடக்கி..
கலியை வீரத்தாலே
கட்டியாள வந்த நல்..
தமிழச்சிகளால் தமிழர் வாழ்வு வளம்பெறட்டும்..!
(இக்கவிக்குத் தலைப்புத் தருங் கவித்தகுதி எமக்கில்லை..!!)
annaa








