கொடுமைக்கும் கடுமைக்கும்
கொடிய தளவாடங்கள்
வெளிக் காரணமானாலும்,
கொடிய மனோபாவமே
உண்மைக் காரணமாகும்.
எனவே மனோபாவ மர்மங்களில்
சத்துவ தர்மங்களை......
முடிந்தவரை நிரப்பினால் அல்லது பரப்பினால்
கருமங்களில் சிரமங்கள் மறையும்.
அன்பிற்கும் பண்பிற்கும்
அது அஸ்திவாரமாகி
அமைதியையும் ஆனந்தத்தையும்
அகிலத்தில் கொணரும்.
எனவே சிந்தையும் செயலும்
தருமத்தின் தடத்தில் செல்க.
பாலு குருசாமி.
கருத்துகள்
சிந்தையும் செயலும் தருமத்தின்
சிந்தையும் செயலும் தருமத்தின் தடத்தில் செல்க.
அப்படியே ஆகட்டும்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்ல கவிதையை சமர்ப்பித்த
நல்ல கவிதையை சமர்ப்பித்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். இதோ உங்களுக்காக என் கவிதை...
சிந்தையும் செயலும் சிவமயமானால்
சிறப்புறு சுவர்க்கமும் சீர்பெற வருமே
செல்வமும் சொந்தமும் நிரந்தரமில்லை
சந்ததம் சிவனென்று சமைந்திருப்பாயே
என்றும் இறைச் சிந்தனையில் இருப்பவர் தருமத்தின் தடத்தில் கண்டிப்பாகச் செல்வர். அவர்களுக்கு அமைதியும் ஆனந்தமும் தானாக வரும்.
அருமையான வழிகாட்டல்!பாலு
அருமையான வழிகாட்டல்!பாலு குருசாமி.
=================================================
செல்வமும் சொந்தமும் நிரந்தரமில்லை
சந்ததம் சிவனென்று சமைந்திருப்பாயே”
========அருமையான பதில்! =============
பதில் சொன்ன பொன்வண்ணனுக்கு!! 
எனது தமிழ் ஆசிரியர்
எனது தமிழ் ஆசிரியர் சீத்தாராமன் அவர்கள் ஒரு சிவபக்தர் இக்கவிதை படிக்க ஐயாவின் நினைவுகள் வந்து என்னை அந்நாட்களை சிந்திக்க வைக்கின்றது!
எல்லாம் "சிவமயம்" எனும் ஐயாவின் குரல் என் காதில் ஒலிக்கின்றது! நன்றி நண்பரே!








