தமிழுக்கு வயதது வளருமென
தமிழுக்கு தமிழே துணையென
தமிழர் மனம் உணர்வுபெற
தமிழே வாழ்கவென சங்கது முழங்கே!
அமிழ்து எங்கள் தமிழென
ஆன்றோர் சொல் வாழென
இன்பமதிலுண்டு இனிமையதுவென
தமிழே வாழ்கவென சங்கது முழங்கே!
அறிவினுள் அறிவு தமிழென
அறமது கற்பித்த தமிழென
மார்தட்டும் எங்கள் தமிழென
தமிழது வாழ்கவென சங்கது முழங்கே!
மண்ணது மணக்க மழையென
வின்னது சிறக்க நிலவென
தரணியில் சிறந்த தமிழென
தமிழே வாழ்கவென சங்கது முழங்கே!
வணக்கத்திற்குறியது தமிழென
மனித வாழ்வது சிறக்க தமிழென
உலக புகழுக்கு ஏற்றது எம்தமிழென
தமிழ் வாழ்கவென சங்கது முழங்கே!
தமிழே வாழ்க வாழ்க வாழ்கவென
தரணிக்கு தமிழால் வாழ்வென
முரசது கொட்டி மகிழ்வோமென
எங்கள் தமிழ் வாழ்கவென சங்கது முழங்கே!
என்றும்: சுஷ்ருவா
{எனது அருமை நண்பர் யாழ்பாவாணருக்கு இக்கவிதைப் பரிசு உரித்தாகட்டும்}
கருத்துகள்
பாவொன்று பரிசாக
பாவொன்று பரிசாக எனக்கீந்தீர்
புனைந்த பாக்களில் சிறந்ததிதுவே
படிக்கப் சுவையாகவும் இசையோடு கேட்கவும்
நல்ல பாவிது வாசகன் மகிழ்வான்...
புனையுங்கள் இன்னும்
நல்ல பாக்கள் பல...
"எங்கள் தமிழ் என்றும் வாழுமென்று
சங்கே முழங்கு" எனப் பாடுங்கள்...
"சூழலைச் சீர் திருத்தலாம்
வாருங்கள்" எனப் பாடுங்கள்...
பள்ளிச் சிறார்களுக்குப் பயன்தரும்
வழிகாட்டலைப் பாடுங்கள்...
கண்ணதாசனைப் போல
தத்துவங்களில் எடுத்துவிடுங்கள்...
வைரமுத்துவைப் போல
ஊர் மணம் கமழப் பாடுங்கள்...
உங்கள் எண்ணங்களில் தோன்றும்
எந்தச் சீர் திருத்தங்களையும்
அவிட்டுவிடுங்கள்...
எல்லாம் சுஷ்ருவா என்று
பெயர் சொல்லட்டும்...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நன்றாக இருக்கிறது
நன்றாக இருக்கிறது 
vijayalakshmi
மிகவும் அருமையான
மிகவும் அருமையான கவிதை........
"மண்ணது மணக்க மழையென
வின்னது சிறக்க நிலவென
தரணியில் சிறந்த தமிழென
தமிழே வாழ்கவென சங்கது முழங்கே!"
மிகவும் அருமை.........
"எமக்கு கவிதை எழுதும்போது எங்கே அடுத்தவர்கள் எழுதிய முறையில் எழுதுகின்றோமோ, அடுத்தவரை பிரதியெடுத்து எழுதியது போலிருக்கின்றது என்று படிப்பவர்கள் நினைத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவுகளை மனம் எண்ணுகின்றது, முயற்சி செய்கின்றேன்!"
என்னைப் பொறுத்தவரை....... இந்த அச்சம் தேவையற்றது........ ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாகச் சொல்கின்றனர்..... இறைவனின் படைப்பிலேயே இப்படி என்றால்........ நம் படைப்பில் தவறில்லை....... உங்கள் கருத்துக்களை தைரியமாக, உண்மையாக வெளியிடுங்கள் தோழரே........
தமிழே வாழ்க வாழ்க
தமிழே வாழ்க வாழ்க வாழ்கவென
தரணிக்கு தமிழால் வாழ்வென
முரசது கொட்டி மகிழ்வோமென
எங்கள் தமிழ் வாழ்கவென சங்கது முழங்கே!

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/














