nadinarayanan's படம்

தாயே தமிழே , தனித்திருந்தாயே
திராவிட ரத்தங்களின்
சிந்தனைக் கூறே !
மானுட பந்தங்களின்
ஆணி வேரே
வீரத்தையும் ஈரத்தையும்
தாய்ப்பாலாக்கிய தமிழ்மொழியே !

தன்மான மொழியே
தவஞான மொழியே
அகழ்வாராய்ந்த மொழியே
அழகிய இதயமொழியே
தமிழ்மக்கள் நாவிலும்
நாதத்திலும் வாழியவே !

செம்மொழியே , செத்தாலும்
உயிர்பிறக்கும் எங்கள் விழியே
வற்றாத நதியே
நீ கைம்மாறு கருதாத
மழையின் மொழியே !

கல்வெட்டில் நின்றாய்
கணணிக்குள் சென்றாய்
ஒலியின் தாயே
தாயின் ஒளியே
ஒழியாத தனிமொழி நீயே!

உண்மைக்கும்,உணர்வுக்கும்
துணைநிற்கும் துணைவியே!
தமிழைப்பாடு,தமிழைப்பாடு
எங்கள தாய்த்தமிழை
கற்றப்பின்னே சாப்பாடு!

விலையில்லா மொழியே
அலையில்லா ஆழியே
கண்ணுக்கும்,கருத்துக்கும்
இடையில் வாழும்
நரம்பும் நீயே !

வாழியிய வாழியவே
தமிழ் வாழியவே!

more poems at
http://naditamilpoems.blogspot.com

8
Your rating: None Average: 8 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

தமிழ் வாழ்க


6

தமிழ் வாழ்க

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...