உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..
மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!
நன்றி!
" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
http://puthuvithai.blogspot.com/
கருத்துகள்
தோழா அண்ணாமலை... இந்தக் கவி
தோழா அண்ணாமலை... இந்தக் கவி எழுத உங்களுக்குரிய கரு உதித்த காரணம் என்னவோ?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
மிகவும் பாரட்டதக்கது. வரிகள்
மிகவும் பாரட்டதக்கது. வரிகள் அருமை.
சந்துரு
அருமை
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
அருமை நண்பரே...
அருமை நண்பரே...
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
அருமையான வரிகள்... சூப்பர்,.,
அருமையான வரிகள்... சூப்பர்,.,
ஆஹா அருமை 10/10
ஆஹா
அருமை
10/10
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...














