annaa's படம்

தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
தவித்துப் போகின்றேன்!
உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
தேனுங் கசப்பாகும்!
உமையாள் பாதி உடையார் போலே
உன்னால் வலிவுற்றேன்!
எமையாள் பவளே எந்தாய் நீயே
எவர்க்கும் இறையானாய்!

இப்பா அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் வகையைச் சேர்ந்தது.

என்னால் எழுதி பிறகு தமிழறிஞர் (திரு.தமிழநம்பி ஐயா)அவர்களால் திருத்தப்பட்டது..ஐயா பாதி.. நான் மீதி..
விளக்கத்திற்கு..
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010/02/4.html

9.4
Your rating: None Average: 9.4 (5 votes)

கருத்துகள்

ranjitsachin's படம்

தங்கத் தமிழ் வாழ்க...


தங்கத் தமிழ் வாழ்க...

annaa's படம்

தோழரே நானும்.. " தங்கத் தமிழ்


தோழரே நானும்..

" தங்கத் தமிழ் வாழ்க...!!"

மிக்க நன்றி தோழரே..!!


annaa


chandru2110's படம்

//எமையாள் பவளே எந்தாய்


//எமையாள் பவளே எந்தாய் நீயே//
ஆஹா என்னே! வரிகள்.


சந்துரு


annaa's படம்

மிக்க நன்றி தோழரே..!!


மிக்க நன்றி தோழரே..!!


annaa


dharshi's படம்

// எமையாள் பவளே எந்தாய்


// எமையாள் பவளே எந்தாய் நீயே
எவர்க்கும் இறையானாய்!///

தமிழ் தாய்க்கு மகுடமே சூட்டிவிட்டீர் நீவிர் வாழ்க..!! உம் புலமை ஓங்குக..!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

தமிழ்த்தாய்


தமிழ்த்தாய் அருளினாலும்,
நண்பர்களின் அன்பினாலும் தானே
நம் உலகமே இயங்குகிறது..!!
மிக்க நன்றி தோழி..!!


annaa


vinoth's படம்

நினைக்கும் போதே இனிக்கும்


நினைக்கும் போதே இனிக்கும் வார்த்தை தமிழ்
தமிழிற்கு எத்தனை கவிதை அணுகல்ன் சூட்டினாலும் மீண்டும் மீண்டும் சூட்டி அழகு பார்க்கவே தூண்டும்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


annaa's படம்

சரியாகச் சொன்னீர்கள்


சரியாகச் சொன்னீர்கள் தோழரே..!! நன்றி..!!


annaa


joshi2010's படம்

தமிழ் இலக்கிய கவிதை வரிகள்


தமிழ் இலக்கிய கவிதை வரிகள் நெடு நாளைக்குப் பிறகு படித்துள்ளேன், மிக அருமை நண்பரே


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


annaa's படம்

மிக்க நன்றி நண்பரே..!!


மிக்க நன்றி நண்பரே..!!


annaa


uthira's படம்

தமிழைப் பருகித் தமிழைப்


தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
தவித்துப் போகின்றேன்!
உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
தேனுங் கசப்பாகும்!

அருமை தோழரே


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


annaa's படம்

மிக்க நன்றி தோழி அவர்களே..!!


மிக்க நன்றி தோழி அவர்களே..!!


annaa