Ponvannan's படம்

குப்பாச வாழ்க்கை குலைந்து விழ வேண்டும்
அப்பாநின் அருளை நினைந்து பெற வேண்டும்
தப்பாமல் தவறாமல் உனதடியில் வீழ்ந்தே
எப்போதும் உன்கருணை நிழலில் வாழவேண்டும்

அய்யோ என அலறி ஆருயிரை விடுமுன்னே
பொய்யான இவ்வாழ்க்கை பொருளுணர்த்தி ஆங்கு
அய்யா உன்பதத்தை இறுகவே நான் பற்றி
மெய்யாலும் மனமுருகி மகிழ்ந்திடவே வருவாய்.

எந்நாளும் உனையன்றி யாரையும் நான் வாழ்த்திலனே
உந்நாமம் என்நாவில் எப்பொழுதும் நடனமிட
சிந்நேரம் சிந்தனையுள் சிங்காரமாய் உலவி
என்நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்பாயே

உலகத்தோடு ஒட்டிவாழ உறவுகளைக் கொடுத்து
உழன்றுதினம் உயிர்வாழ வழிவகைகள் காட்டி
உள்ளம்தனை நெறிப்படுத்தி நிலையாமை உணர்த்தி
உன்னிழலே உறுதியெனும் உண்மைதனை உரைத்தாய்

கண்டுகொண்டேன் கண்குளிரக் கருணைபொழி முகத்தை
வண்டுமொய்க்கும் தேன்மலரின் ஆரமதற்குள்ளே
பண்டுமுதல் இன்றுவரை அநாதியாய் நீ நின்றே
அண்டிவரும் உயிர்களுக்கு ஆனந்தமே தருவாய்.

அங்கு இங்கு என்றிலாது எங்கணுமே நிறைந்து
பொங்கிவரும் உளத்தினிலே செந்தமிழாய்ப் பிறந்து
இங்கிதமாய் இன்னிசையாய் இன்னருளாய் விளங்கி
துங்கமுடன் தமிழ்க் கவிதை நாயகனாய் வருவாய்

பக்தியோடு பரவியுந்தன் பதத்தினையே பணிந்து
சக்தியோடு சிவனுருவாய் சிந்தனையில் மலர்ந்து
யுக்தியாவும் கொடுத்து உத்தமராய் உயிர்வாழ
சித்திரமாய் சிலைவடிவாய் சிற்பரமாய் உதிப்பாய்

குருவுக்கும் குருவான குருப்பிரம்ம குருவே
உருவுக்குள் உருவான உலகளந்த உருவே
மருவுக்குள் மலரான மணங்கமழும் முருகே
கருவுக்குள் உயிராகி கலந்துநின்ற திருவே

ஆராவமுதெனவே அன்பர் கொளும் விருந்தே
சீரான சிவக்கொழுந்தே சீவர்களுக்கு மருந்தே
வேரான உறவாலே உனைப் பிரியாதிருந்தே
தேரான என்னுளத்தில் குடியிருக்க இசைந்தாய்

சிவ சிவ என்றுன்னை செபித்திட்ட போதே
தவ சிவ நிலை கொடுத்து வாழ்த்தியருளுவாய்
நவ நிதி உன்கருணை ஆறாய் வழிந்தோட
பவ வினை பொடிபட உயிர்த் துணையாவாய்

(நண்பர்கள், சரவணமுத்து, பாலு குருசாமி, கன்னியாகுமரி வினோத், சுஷ்ருவா ஆகியோரின் சிவபக்தியைப் பாராட்டி இக்கவிதையைப் படைக்கிறேன்)

7.33333
Your rating: None Average: 7.3 (3 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

திருஅருட்பிரகாச வள்ளலார்,


9

திருஅருட்பிரகாச வள்ளலார், அப்பர், திருஞானாச‌ம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர், அகத்தியர் இவர்களின் பாடல்களைப் படித்தது போல் ஒரு மகிழ்ச்சி. சிவ யோகம் கற்ற ஒரு நுணுக்கம், இறைக்காட்சி எமக்களித்த ஒரு தரிசனம்,

ஐயா உண்மையிலே அற்புதமாகயிருக்கு இப்பாடல், தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்!

Ponvannan's படம்

தங்கள் சித்தம் என் சித்தமே.


தங்கள் சித்தம் என் சித்தமே. நன்றி

yarlpavanan's படம்

சிவாய நம


7

சிவாய நம என்றோதுவார்க்கு
அபாயம் ஒருபோதுமில்லை...
அது போல
தங்கள் பக்திப் பாக்கள்
எங்களை
இறைவனிடம் பக்தி வைக்கத் தூண்டுகிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ponvannan's படம்

நன்றி யாழ்பாவாணன் அவர்களே


நன்றி யாழ்பாவாணன் அவர்களே

vinoth's படம்

"சிவபக்தியைப் பாராட்டி


6

"சிவபக்தியைப் பாராட்டி இக்கவிதையைப் படைக்கிறேன்"

இது எப்படி? எங்கிருந்து அறிந்தீர்கள் என்பது ஆச்சரியம்

Smile

கவிதை அருமை.
Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ponvannan's படம்

நன்றி வினோத் அவர்களே.


நன்றி வினோத் அவர்களே.