dharshi's படம்

எங்கோ பிறந்த
ஏனோ வளர்ந்த
ஏதோ ஒரு மொழியல்ல
தமிழ்

சிந்து வெளியின்
சின்னங்கள் கூறும்
தொன்மைத்
தமிழ்

சிந்தனையின்
சிகரங்கள் தூண்டும்
வீரத்தமிழரின்
வித்தைத்
தமிழ்

ஈரேழுலகாழும்
வீரப்புதலவர்களை
பெற்றகம் மகிழும்
தாய்த்
தமிழ்

இலக்கணக் கட்டுடல்
இலக்கியப் பட்டாடை
அழகிய திரு நுதலில்
பொட்டாய் பண்பாடு
இயல் இசை நாடகம்
இலங்கும் ஆபரணமாய்
பூண்ட தமிழ்த் தாயின்
உலகாட்சி
தமிழ்

கருக்கொண்ட
சொற்கள் கண்டதுண்டா?
தமிழில் உண்டு
தினை, பால், வழுவற்ற
செருக்குடன் மிளிரும்
செல்வ மொழி
தமிழ்

விண்ணுலகம் வியக்கும்
கோபுரங்கள்
கண் தவம் செய்த
சிற்ப ஓவியங்கள்
மண்ணில் கவிஎழுதும்
ஆடல் என
இன்னும் பல கலை வளர்த்த
பக்தி மொழி
தமிழ்

வாகை மலருக்கு ஏது
தட்டுப்பாடு
வானம் வரை இல்லை
கட்டுப்பாடு
என வேலும் வாளும்
சரித்திரம் எழுதிய
வீர மொழி
தமிழ்

காற்றை உருக்கி
காதலுக்கு தூதனுப்பி
நாற்று நடுபவரும்
நாடாளுமன்னரும்
போற்றும் குலப்
பண்பு குறையாமல்
பேசி மகிழ்ந்த
காதல் மொழி
தமிழ்

ஆதியோடு அந்தம்
இல்லாத மொழி
அலை மோதும் கடற்கோளும்
அலைக் கழிக்கும் இடம் பெயர்வும்
அழிக்க முடியாத
ஆரோக்கிய மொழி

ஆறாயிரம் ஆண்டு
தொன்மையின் சான்று
இன்னும் உறுதியாய் வாழும்
நூறாயிரம் ஆண்டு.

(2001ம் ஆண்டு தமிழ் மொழி தின கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

கருத்துகள்

VISWAM's படம்

அருமையான தமிழ்.


அருமையான தமிழ்.

dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


su.senthilkumaran's படம்

இது கவிதை மட்டுமல்ல. தமிழின்


இது கவிதை மட்டுமல்ல.
தமிழின் விசாலம் சொல்லும் விலாசம் .
அற்புதமான படைப்பு.

dharshi's படம்

மிக்க நன்றி சு.


மிக்க நன்றி சு. செந்தில்குமரன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

தமிழ்த் தாய்க்கு தமிழ் கவிதை


தமிழ்த் தாய்க்கு
தமிழ் கவிதை மகுடம் சூட்டிய
தமிழீழ தமிழச்சிக்கு
என் நன்றிகளும் வாழ்த்துகளும்...


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

கன்னியாகுமரி எமக்கு தந்த


கன்னியாகுமரி எமக்கு தந்த தமிழ் நண்பன் வினோத்க்கு மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

அருமை..!!என்ன


அருமை..!!என்ன வரிகள்..!!!
தமிழை வாழ்த்த தமிழிற் பாடினால்
தேனில் மேலும் தேனைக் க‌ல‌ந்தால்..!!
தமிழீழத் தமிழச்சியா நீங்கள்..!!! ஆகா..!!
வருக..!!


annaa


dharshi's படம்

அப்போ நீங்க என்னோட profileல


அப்போ நீங்க என்னோட profileல பார்க்கவே இல்லையா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

நான் சரியாகக்


நான் சரியாகக் கவனிக்கவில்லை..!!
கதையுங்கள்..!! உங்க‌ள் க‌தை ...!!
க‌தையுங்க‌ள்..!!
வ‌ருக‌ தோழி..!! த‌மிழ‌ன்னை
த‌ம் ம‌க்க‌ளால் வ‌ள‌ம் பெற‌ட்டும்..!!


annaa


dharshi's படம்

//கதையுங்கள்..!! உங்க‌ள் க‌தை


//கதையுங்கள்..!! உங்க‌ள் க‌தை ...!!
க‌தையுங்க‌ள்..!!// இது என்னை எதோ வம்புல மாட்டி விடுற மாதிரி இருக்கு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


yarlpavanan's படம்

தமிழுக்கு நிகர் தமிழே தான்


10

தமிழுக்கு நிகர் தமிழே தான்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil