கந்தன் நகையினிற் பிறந்து
காலவே கத்தினில் வளர்ந்து
சந்தம் ஆயிரம் புனைந்து
சாவினைத் தூக்கியே எறிந்து
அந்தம் ஆதியும் அற்றே
அலைகடல் போலுரு வெடுத்துத்
தந்தத் தூய்நிற மாகித்
தரணியை ஆண்டிடுந் தாயே!
இப்பா அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியமண்டிலம் வகையைச் சார்ந்தது..
இதுவும் தமிழநம்பி ஐயா அவர்களின் திருத்தத்திற்குப் பிறகான எனது பாடலே.. நன்றி.. விளக்கத்திற்கு..
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010/03/6.html
கருத்துகள்
எந்த வலைப் பக்கம் தோழா? நிறைய
எந்த வலைப் பக்கம் தோழா? நிறைய விடயங்களை அறிய ஆவலுடன் உள்ளேன்..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அதை நான் முதல் பாடலின் போதே
அதை நான் முதல் பாடலின் போதே பார்த்து விட்டேன்.. வேற ஏதும் தளமும் உண்டோ என்று தான் கேட்டேன்... நன்றி
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
//அந்தம் ஆதியும்
//அந்தம் ஆதியும் அற்றே//
ஆம்,தமிழுக்கு முடிவும் முதலும் இல்லை.
சந்துரு
"அந்தம் ஆதியும் அற்றே"
"அந்தம் ஆதியும் அற்றே"
உண்மையில் அருமையான வரிகள் தோழரே......








