annaa's படம்

தமிழே !அமுதே !

சொந்த மொருவரு மில்லை!
....சொல்லிடத் தகுவது மில்லை!
தந்த அழகினை உரைக்க
....தரையினில் உறவெனக் கில்லை!
எந்தன் மனத்தினை யாளும்
....இணையிலா மொழியென வாழும்
இந்தி ரவுலகும் போற்றி
....ஏத்திட விளைந்திடு தமிழே..!

சந்தச் சுவைமிகுந் தூறும்
....சந்தனக் கனிகளின் சாறும்
எந்தக் காலமும் ஆளும்
....எத்திசை நோக்கினும் வாழும்
நிந்தன் துணையொடு நானும்
....நித்தமும் வாழ்ந்திடல் வேண்டும்!
வந்தென் நாவினில் அமர்ந்து
....வழங்குக பாக்களைத் தாயே.!

-------
" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/

10
Your rating: None Average: 10 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

தமிழ் வேந்தர் திரு அண்ணாமலை


தமிழ் வேந்தர் திரு அண்ணாமலை அவர்களுக்கு என் வந்தனங்கள்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


annaa's படம்

வந்தனங்கள்


வந்தனங்கள் அன்னைத்தமிழுக்கே.!
நாம் தமிழடிப்பொடிகள்.! தோழரே, மிக்க நன்றி.!


annaa


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


annaa's படம்

நன்றி தோழரே..


நன்றி தோழரே..


annaa


ranjitsachin's படம்

த்மிழ் வாழ்க...


annaa's படம்

நன்றி தோழரே.. "வாழ்க தமிழ்"


நன்றி தோழரே..
"வாழ்க தமிழ்"


annaa


dharshi's படம்

கன்னித்தமிழ் தினம்பேசி


கன்னித்தமிழ் தினம்பேசி மகிழ்ந்தாடவே - எழில்
மொழிநடை பாக்களைக் கண்டேன் - தோழா உன் போல்
செந்தமிழைப் பேசிடின் மெல்லத் தமிழினிச்சாகாது.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

நம் தலைமுறையில் தமிழைத்


நம் தலைமுறையில் தமிழைத் தடையின்றி
அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வோம்.!
வரும் தலைமுறையினர் வாழ்த்தட்டும் தமிழை.!
ஆம் தோழி.! மெல்லத் தமிழினி மேவும்.!
மிக்க நன்றி!


annaa