முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள்முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்குமுன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது
இலங்கையின்வடபுலத்தேஅடிக்கடி அடிவேண்டும்செய்தி நாளேடுஉதயன் என்றே சொல்லலாம்!இலங்கையில்அடிக்கடி அடிவேண்டும்சாவடையும்இதழியலாளர்களும்வடபுலத்தாரே!இதழியலாளரின் எழுதுகோலுக்குஅரசனும் அஞ்சுவான்...பாரதியின் எழுத்துக்குபிரிட்டிஸ் வெள்ளையன் நடுங்கியதும்நல்ல எடுத்துக்காட்டெல்லோ!உண்மை தான்...செய்தி நாளேடுகள் உண்மையை எழுதிப்போட்டால்அரசுக்கு நெருக்கடிஅடிக்கடி வந்து சேரதாக்குப் பிடிக்க முடியாமல்செய்தி ஏடுகளோடுமோதிக் கொள்வது சரியாமோ?கத்தி விளிம்பில் (கூர் முனை மேல்)
உரிமை கேட்டோம் மறுக்கப்பட்டது ...! உடமைகள் இழந்தோம் உரிமைக்காக ...! உறவுகளை உண்மை உறவுகளுக்காக ...!
எமக்கு தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....! தடையில்லாமல் சுவாசிக்க மூக்கு வேண்டும் ...! பேசுவதற்கு வாய்வேண்டும் ...!
இவை எல்லாவற்ரையும் விட ....?
என் தேசத்தின் ஒரே ஒரு பிடி மண் வேண்டும் ...! மண்ணில் பயிர் வளருமா ..? தலைமுடிவளருமா ..? என்று நான் .. ஆய்வு செய்வதற்கு ...!
விடியலுக்காக விதைகளை யிட்டோம்... மடிவதற்காக சிதைகளையல்ல…
கொடிகளில் பூக்கள் மலர்வது எல்லாம்விழிகளில் கோக்கும் நீர் துளிக்கல்ல…
வழிகளைப் பார்த்து முட்புதர் நீக்கிதடம் இடத்தானே தவறிட அல்ல…
நாளும் போர்குணம் வேர்விடா வாழ்வைநாடும் என்பதை நினைப்பது நன்று…
வாழ்க்கைப் பக்கத்தில் குறுதியும் போதும்வாழும் நம்பிக்கை அமைதியாய் வேண்டும்
அனாதை மரங்களாய்அகதிப் பூக்களாய்இழந்தது கணக்கிலைஇருப்பதுந் தெரியலைநெருப்புக் கோளமாய்உருத்தும் உணர்வுகள்இருத்துப் பார்க்கவேஇறுக்கும் வலியினால்பொறுக்க முடியலைவருத்தம் வறுப்பதால்கருத்த காவியம்வெறுத்த வாழ்க்கையாய்இருக்கும் பொதிலேதடுக்கா அறிவதுஎடுக்காதிருப்பதுஎன்ன என்பதைவிடுத்துப் போனதால்எண்ணிப் பார்ப்பதுநன்மை தருமெனநினைத்துப் பார்ப்பதால்குறைந்தா போகுவோம்
காக்கிறேன் பேரிலேதாக்கிடுந் தர்மமாய்நோக்கியே எழுவதுநோக்குமோ நல்வழி
எமக்கு ஏற்பட்ட காயங்களை .. கண்ணீரால் கழுவுகிறோம் ... காயங்களுக்கு தேவைப்படுவது முதலுதவிதான் ...என்றாலும் சத்திரசிகிச்சையும் தேவைதான்.. நிரந்தரமாக குணமாக ...!
பண்டைப் பெருமை யாவையுமே -க்ட்டிப்
====பரண்மேல் தூக்கிப் போட்டுவிட்டுத்
தொண்டை கிழியக் கத்துகிறீர்-உம்மால்
====துலங்கும் நன்மை ஏதுமிலை
அண்டை நாட்டில் அனுதினமும்- நம்
====அருமைச் சோதர் துடிக்கின்றார்
கண்ட தல்லால் என்செய்தீர்? =தமிழ்க்
====குலமென் றெங்கும் சொல்லாதீர்!
வீர மற்றப் பேடிகளே -என்றும்
====வெட்டிப் பேச்சில் வல்லவர்கள்
சார மென்று ஏதுண்டு?- வெறும்
====சக்கை தமிழர் கதைகள்காண்
சீறும் புலிகள் என்பவர்யார்? -புன்மைச்
====சிறுவ ளைவாழ் எலிகளெனக்
நாட்டுக்குள்
எதிரியை நுழைய விடாது
தாக்க வரும்
எதிரிப்படையை விரட்டி விட
நாட்டின் எல்லைகளிலே
காத்திருக்க வேண்டியவர்களே
படையினர் (இராணுவம்)!
ஆனால், பாருங்கோ
அடிச்சுச் சொல்றேனுங்கோ
மக்களில்லா இடம் பார்த்து
இருக்க வேண்டியவர்களே
உலகமே
ஈழத்தைப் பாரு...
தமிழ் மக்களின் நிலம் பறித்து
சிங்களப் படை
குடியிருப்பதால் தானே
உலகெங்கும்
இருநூற்றைம்பது நாடுகளில்
ஈழத் தமிழர் காலடி வைத்தனர்!
இன்றைக்கு(10/03/2013)
யாழ் பத்திரிகைகளில்
உதிர்க்கப்படும் பூக்களும்,உடைக்கப்படும் மனநிலையும்.
பூக்களின் புன்னகை விரிப்பால்புதுப்பொலிவையே கண்ட மரம்தன் பூக்களையெல்லாம்மொட்டிலேயே உதிர்த்துவிடுகிறது - இல்லைஉதிர்க்கப்பட்டுவிடுகிறது.
விருட்சங்கள் வேரூன்றிய நேற்றுவண்டுகள் வந்து சேரும்வரைதண்டுடன்தான் இருந்தன பூக்கள் - இன்றுகுண்டுகள் தாங்கிய பூக்களோகுருதி படிந்த இதழ்களுடன்தண்டுகள் இழந்து தவிக்கின்றன.
சில பூக்கள் கிழிந்த இதழ்களுடன்அழிந்த கோலங்களாய்அலை மோதுகின்றன.