அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்...
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்....
உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை...
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை...
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை...
வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?
பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?
பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?
நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் - என்றன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா?
பட்டம் அளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?
பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
பூட்டி வதைத்தாலும் - என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வரும் புகழோடு
சிர்க்க மறப்பேனா?
கருத்துகள்
அன்பு நட்பே வரிகள்
அன்பு நட்பே
வரிகள் ஒவ்வொன்றும்
தமிழ் மொழியை தொலைத்து
நுனி நாக்கில் கெளரவம் என
நினைத்து ஆங்கிலத்தை பேசும்
ஒவ்வொரு மனிதனுக்கும் தந்த
சாட்டையடி ..................../-
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
மாற்றான் மணைவி அழகி
மாற்றான் மணைவி அழகி என்றால்
தன் மணைவி எண்பதா?
ஊரான் பிள்ளை புத்திசாலியானால்
நீ முகப்பெழுத்து கொடுப்பதா?
"காசி ஆனந்தன்" பெயர் இன்று "மது"
என்றானதா?
தலைப்பை கூட மாற்றாத தைரியம்
என் தமிழன்னை தந்ததா?
இல்லை
ஆனந்த விகடன் புத்தகத்தை
வாசிக்க மாட்டோம் என்று துணிந்ததா?
இந்த திருட்டு கவிதைக்கு
விமர்சனம் தான் ஒரு கேடா?
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
சொந்த படைப்பு தான் பதிவு
சொந்த படைப்பு தான் பதிவு செய்ய வேண்டும் என்கிறார்களே பிறகு ஏன் இப்படி.ஆனால் காரசாரமான
விமர்சன கவிதை ஒன்று வந்திருக்கிறது 
பூக்கள் கடவுளுக்கு சொந்தமானது
பாவலர் காசிஆனந்தனின் வரிகள்
பாவலர் காசிஆனந்தனின் வரிகள் போல உள்ளதே!
இப்பாவில் எத்தனை பிறமொழிச் சொற்கள்
அத்தனையும் நம்மாளுகள் பேசுகிறார்களே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
என்னடா எங்கேயோ இதை படித்த
என்னடா எங்கேயோ இதை படித்த மாதிரியுள்ளதே என் நினைத்த பொழுது மாலதியின் சின்டுபிடி அடி மிகவும் அருமை!
ஏன் மது!? கவிதையை எழுதியவரின் பெயரை பதிந்திருக்கலாமில்லையா? எனக்கு சிரிப்பு தான் வருது!
தமிழன் சாதிகளால் தனித்தனியாக
தமிழன் சாதிகளால் தனித்தனியாக வேறுபட்டிருந்தாலும் மொழியிலாவது ம்ற்றவர்களுடன் கலப்பாக இருக்கிறானே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.



















