Skip to main content

தந்தையர் தின [ புல] ம் [பல்]

URI: http://tamilnanbargal.com/node/40628
கருத்துகள்: 2Likes: 0390 views

தந்தையர் தின [ புல] ம் [பல்]

sukumaran's படம்

தாயை கோவில் கட்டிக் கும்பிடும்

தாய்க்கு தலைமகன் கள் -வாழும் உலகம்,

தந்தை பாசம் மறந்தது -காரணங்கள் என்ன?

உருக்கொடுத்த தாய்க்கு

கருக்கொடுத்தது அப்பனன்றோ?

வாழ்வின் வழி அமைத்துக்கொடுத்த

வாழ்க்கை வழி காட்டிகளை -ஓரமாக்குவது ஏனோ?

அப்பனின் கோபம் எல்லாம்

மக்கள் மீதான பாசத்தின் வெளிப்பாடுகள் தானே?

உருப்படியாக வளர்க்கும்அன்பின்அவதாரம்தானே.

இது ஒரு அப்பனின் புலம்பல்,

தாயை விட தாழ்த்தி வைக்கப்பட்ட

அப்பாவியின் புலம்பல்,

தாய்க்குப்பின் கூட தாரம்தானா?

தந்தையில்லையா?

அன்னையர் தினம் அறிவித்து நாளகளாகி

போனால் போகிறது என்றுதான்

தந்தையர் தினமா?

அன்னையின் பாசம் அணைப்பில் வெளிப்படுகிறது.

ஆனால்

தந்தையின்அன்பு பெரும் பாலும்

அடிகளில்தானே வெளியாகிறது.

அடிக்கிற கைதான் அணைக்கும்-மக்களின் நல்-

வாழ்க்கை கதவையும் திறக்கும்.

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

Ponvannan's படம்

தந்தையின்அன்பு பெரும் பாலும்
அடிகளில்தானே வெளியாகிறது.
அடிக்கிற கைதான் அணைக்கும்-மக்களின் நல்-
வாழ்க்கை கதவையும் திறக்கும்.

அன்புக்குத் தாயும் அறிவுக்குத் தந்தையும்
இருக்கும்பொழுது ஏன் இந்தப் புலம்பல்?
 

 

vinoth's படம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...