sugapiriyan's படம்

விடிந்ததும் திறக்கின்ற விழிகள் ரெண்டும்
உன் மடி சாயும் அந்நொடி தேடி
அலைகிறதடி அங்கும் இங்கும்..

இரவில் வேர் விட்ட
ஆசையின் கனவுகள் அத்தனையும்
காலையில்
புன்னகைகளாகவும்
முத்தங்களாகவும்
பூத்துக் காத்திருக்கின்றன
காதலியே உன் முகம் பார்த்து..

உன்னை அப்படியே
அள்ளிக் கொஞ்சத்தான் வேண்டும் என்றாலும்
கொஞ்சம் தள்ளியே நிற்கிறேன் நான்
மற்றவர்கள் இருப்பதற்காய்..

ஆனாலும் என் கண்கள்
ரகசியமாய் உன்னை
இறுக்கக் கட்டிப் பிடிப்பதை
தடுக்க முடியாதடி யாராலும்…..

4.66667
Your rating: None Average: 4.7 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

ரகசியமாய் உன்னை இறுக்கக்


4

ரகசியமாய் உன்னை
இறுக்கக் கட்டிப் பிடிப்பதை
தடுக்க முடியாதடி யாராலும்…..

Smile

Shock heart


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


aro...'s படம்

அவ்வளவு


5

அவ்வளவு ஆசையா..................? அருமை... Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


Ponvannan's படம்

பரவாயில்லையே.. உங்கள்


5

பரவாயில்லையே.. உங்கள் கண்களாலேயே அவளைக் கைது செய்து விட்டீர்களே.