rajudranjit's படம்

தமிழென ஒரு மொழி
உலகில் தனிதன்மை
கொண்ட மொழி!

பினிபிடித்து ஆட்டுகின்ற
மாற்று மொழி கோட்பாடு
சனிப் பிடித்த கதையாகிப் போனதே!

இனிமையான தமிழ்மொழி
இனியொரு மொழி இல்லை
இதுபோல் உலகிலென்பேன்!

காட்டுமிரான்டி காலம் தொட்டு
நாகரீகம் வளர்த்த மொழி
போற்றுகின்றார் பெருமையுணர்ந்தோர்!

வாழுகின்ற தலைமுறையும்
வருகின்ற தலைமுறையை
தமிழ் வளர செய்யுமோ?

அப்பனை டாடி என்று
அன்னையை மம்மி என்றும்
அழைக்கச் சொல்லும் பேடிகளே!

எந்த மொழியில் பேசினாலும்
அன்னை மொழி மறப்பது
தன் அன்னையை விற்றதற்கு சமமே!

எத்தனை விடயங்கள்
எம்மொழியில் விளக்கங்கள்
எட்டிக்காயா எம் தமிழ்!

தொன்மையான தொல்காப்பியம்
செப்புகின்ற செய்திகள் உண்மைகள்
இலக்கணம் தெரியாத ஜென்மங்களே!

ஒவ்வொரு மொழியிலும்
ஒரு பெருமையுண்டு
எம்மொழிக்கும் அதைவிட
சிறப்புகள் ஏராளம் தாராளம்!

விவேகத்தின் வெற்றியும்
நெஞ்சறியும் சத்தியம்
பைந்தமிழிலுண்டு நிச்சயம்!

நீ படித்துப்பார் தமிழ்
உணர்ந்து கொள்வாய் அமிழ்தென
உயிரினும் மேலான எம் தமிழ்!

வாழ்வின் ஆதாரம் கூறும்
உலகின் தோற்றம் பகரும்
மனிதனுக்கு பெருமை தரும்!

நோய்ப்பட்டு வீழ்ந்தாலும்
வாய்விட்டு அழுதாலும் மருந்தென
ஆறுதல் சொல்லும் அழகு தமிழ்!

இல்லையொரு மொழியில் சரித்திரம்
போக்கும் மனித வாழ்வின் தரித்திரம்
தமிழ் தான் உலகின் அற்புத விசித்திரம்!

வரலாறு சொல்லுமுலகில் தமிழ்
ஆற்றுப்படை தந்ததெங்கள் தமிழ்
இனியவை நாற்பதிற்கு மேலெங்கள் தமிழ்!

குடிபிறந்த கதை சொல்லும்
அது வாழ்ந்த மறை சொல்லும்
உலகில் தமிழ் மட்டும் வெல்லும்!

வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வானோங்கும் யாம் போற்றும் தமிழ்
தேனினும் இனியத் தங்கத்தமிழ் வாழ்கவே!

என்றும்:-சுஷ்ருவா

7.375
Your rating: None Average: 7.4 (8 votes)

கருத்துகள்

vinoth's படம்

"அப்பனை டாடி என்று அன்னையை


5

"அப்பனை டாடி என்று
அன்னையை மம்மி என்றும்
அழைக்கச் சொல்லும் பேடிகளே!"

"பேடி" -- தேவையான வார்த்தை

தேனினும் இனியத் தங்கத்தமிழ் வாழ்கவே!


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

பாடுபொருள் சிறப்பானது.


10

பாடுபொருள் சிறப்பானது. நம்மாளுகள் நன்கறிய வேண்டிய உண்மையைச் சொன்னீர். நன்றி. Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


karthik2011's படம்

மொழி தாயின் போர்வாளே நீ


5

மொழி தாயின் போர்வாளே நீ வாழ்க......

rajudranjit's படம்

நன்றி நண்பர்களே!


நன்றி நண்பர்களே!

sasikumar's படம்

(No subject)


8

Clap Clap Clap


- சசிகுமார்