vanithaselvam1212's படம்

வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.

புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.

இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்
வெள்ளிக் கொலுசுகளின்
வெள்ளை மணிகள் தான்
அதை
துலக்கிவைத்துப் போயின.

தரை மோதும் முன்
முகம் மோதும்
ஓர்
பனித்துகளின் மென்மை
உன் புன்னகையில்.

நிறம் மாறா
அடர் வெண்
மேகத்தின் மென்மை
உன் கன்னங்களில்.

கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?.

என்
கருப்பு இரவுகளில்
தினம் தினம்
பௌர்ணமியாய் உலவ
உன்னால் மட்டுமே முடிகிறது.

உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.

உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.

கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்.

வருகிறது
காதலர் தினம்.
அப்போதேனும் சொல்வேனா ?
இல்லை
கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

nandhalala's படம்

very nice... write more:)


very nice... write more:)


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


vanithaselvam1212's படம்

நன்றி


நன்றி


அனிதா,BGDCA


ranjitsachin's படம்

அருமையான கவிதை...


அருமையான கவிதை...

vanithaselvam1212's படம்

நன்றி


நன்றி


அனிதா,BGDCA


annaa's படம்

ஆகா...! நன்று..!! அருமை தோழி


ஆகா...! நன்று..!!
அருமை தோழி அவர்களே..!!


annaa


vanithaselvam1212's படம்

நன்றி அண்ணாமலை.,


நன்றி அண்ணாமலை.,


அனிதா,BGDCA


chandru2110's படம்

மிக மிக மென்மை.


மிக மிக மென்மை. நல்லாயிருக்கு.


சந்துரு


vanithaselvam1212's படம்

நன்றி சந்துரு


நன்றி சந்துரு


அனிதா,BGDCA


joshi2010's படம்

சூப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர


சூப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கலக்குறீங்க தோழி......... தங்கள் திருமணம் காதல் திருமணமா.......... கவிதை கொட்டுது
"கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?.

என்
கருப்பு இரவுகளில்
தினம் தினம்
பௌர்ணமியாய் உலவ
உன்னால் மட்டுமே முடிகிறது.

உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்."


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


vanithaselvam1212's படம்

என் திருமணம் காதல் திருமணம்


என் திருமணம் காதல் திருமணம் தான் தோழா,நன்றி தோழா,,


அனிதா,BGDCA


uthira's படம்

சூப்பர்


சூப்பர்


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


saravanamuthu's படம்

வருகிறது காதலர்


வருகிறது
காதலர் தினம்.
அப்போதேனும் சொல்வேனா ?
இல்லை
கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?
----------------------------------------------------
மிக அருமை தோழி
சரவணன்

jothibala's படம்

அருமை!


அருமை!


jothibala


Ragavan's படம்

"உச்சந்தலையில் ஒற்றை விரல்


6

"உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.

கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்."

அட்டகாசமான வரிகள்....
வாழ்த்துக்கள் தோழி....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Ragavan's படம்

"உச்சந்தலையில் ஒற்றை விரல்


6

"உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.

கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்."

அட்டகாசமான வரிகள் தோழி..
மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..