வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!
கருத்துகள்
சொந்த
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!
மனதை தொடுகிற வரிகள்
மனிதனின் நகரவாழ்வியலை உணர்வுகளுடன் சொல்லியவிதம் அருமை
வாழ்த்துக்கள் தோழரே ...
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
வயல்வெளி பார்த்து வறட்டி
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு
நண்பா... கடைந்த காலம் என்னை வருடுகிறது.
நண்பா... கடைந்த காலம் என்னை வருடி செல்கிறது.
அன்புடன் கண்ணண்.

நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....
என்னது கடைந்த காலமா. என்னத்த
என்னது கடைந்த காலமா.
என்னத்த கடைஞ்சிங்க கண்ணன்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
"சிறிதாய்த் தூங்கி கனவு
"சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !"
"சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!"
முற்றிலும் உண்மையான வரிகள்....
ரொம்ப நல்லா இருக்கு மாரியப்பன்...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
சொந்த
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா
உன்மையான வரிகள் நண்பரே! ஆனால் நீங்களாவது தாய்நாட்டில்(இந்தியாவில்) இருக்கின்றீர்கள் எங்களை போன்றேரை நினைத்து பாருங்கள்???????????? நித்தமும் கண்ணீர் தான்

மிகச்சிறப்பாக
மிகச்சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்..
ஆனால்
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
இங்கே என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்களே : )
ஆனால் கவிதை அருமை..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









