1. அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு ? போய்ப் படி 2. பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள் தேவாலயங்களில் இந்துக்கள் 3. காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு 4. குழந்தைகள் கூடி மண்சோறு சமைத்தார்கள் இறைவன் பசியாறினான் 5. காதல் கவிதைகளை எரித்தேன் சாம்பலிலிருந்து பிறந்தது என் காதல் 6. முதன் முதலாக அம்மா என்றது குழந்தை வேளைக்காரியைப் பார்த்து 7. தோல் கண்டார் நடிகையின் தோலே கண்டார் திரைப்பட இயக்குநர் 8, நிமிடத்திற்கு நான்கு முறை கூந்தலை சரிசெய்தாள் நடிகை மாராப்பில் விலக்கிவிட்ட சேலையை மறந்து 9, நீயும் நானும் தீண்டத் தகாதவர்கள் நாம் காதலர்கள் 10. கோல் எடுத்தும் குரங்கு ஆடவில்லை மருமகள் 11. நான் சொல்வதெல்லாம் உண்மை நான் வாதாடுவதெல்லாம் உண்மை உச்சநீதி மன்றத்தில் சட்டம் 12. கூட்டணி தர்மம் கட்சி மாறினான் அரசியல்வாதி ஓட்டு போட்ட மக்கள்? 13. கடவுளுக்கும் ஆயுள் தண்டனை கோயில் 14. நம் பெயரை எழுதினேன் கள்ளிச் செடி அப்போதே பாலூற்றி விட்டது 15. அடித்துத் துவைத்தேன் வெளுக்க வில்லை நீதி தேவதையின் கண்கட்டி 16. மதம் மாறியது காதல் சுடுகாடு மட்டும் பழையது 17. என் கண்ணில் நீ வழுக்கி விழுந்தாய் சேற்றில் செந்தாமரை 18. இறைவன் சந்நிதி கண் மூடினேன் தாலிச்சரடு காணோம் 19. தூண்டியில் நெழிந்த புழுவை காக்கத் துடித்த மீன் கரையில் துள்ளுகிறது 20. கண்களைத் துடைத்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டார்கள் காதலர்கள் 21. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஆனாலும் வரி 22. சிரித்தாள் திரும்பிப் பார்த்தேன் என் பின் புறம் 23. மாடு மேய்ப்பது எப்படி கற்றுக்கொண்டிருந்தான் கம்ப்யூட்டரில் விவசாயி 24. சட்டையில் பை இல்லை அரசியல்வாதிக்கு கையில் பிரிப்கேஸ் 25. என் கருவுக்குத் தேவைப்பட்டது படுக்கையறைக் காட்சி நடிகை விளம்பரம் 26. ஆடையில் கிழிசல்கள் போஸ்டருக்குப் பால் அபிஷேகம் ரசிகர்கள் 27. அழகிப்போட்டி அதிசயம் வெற்றிப் பெற்றாள் முற்றும் துறந்தவள் 28. வீடு தேடிச் சென்றேன் இல்லை என்றது கடன்காரன் குரல் 29. தலைவாரிப் பூச்சூட்டினேன் பின்பு பேன் பார்த்தேன் பொம்மைக்கு 30. குழந்தைகளுக்குப் பசி தாமே சமைத்து உண்டார்கள் மண்சோறு 31. காரியம் கூட நடக்கவில்லை அரசியல்வாதிக்கு அதற்குள் பிறந்த நாள் விழா 32. நடந்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டான் நரகத்தில் கடவுள் 33. காலையில் நுழைந்தேன் நள்ளிரவில் வெளியே வந்தேன் கோயிலிலிருந்து 34. கர்ப்பக்கிரகத்தில் பூசாரி பல்லி கூச்சலிட்டது கன்னத்தில் போட்டுக்கொண்டான் 35. ஆச்சரியம் வெட்கப் பட்டாள் நடிகை தன் திருமணத்தில் 36. என் காதலுக்கு தடையாக இருந்தது காதலியே தான் 37. இருபது வயது குறைந்து விட்டது எதிரே காதலி 38. பழித்தல் பழிவாங்குதல் சீரியல்கள் 39. உன்னைப் பார்த்து ஒரே முறை பேச வேண்டும் வா இறைவா 40. சைகை காட்டி அழைக்கிறது அவள் கால்தடம் 41. நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குத் தாவினேன் காதல் தோல்வி 42. தேடினேன் ஓடிப்போய் ஒளிந்து கொண்டான் இறைவன் 43. நடிகை சோப்பு போடுகிறாள் ஒவ்வொரு விளம்பரத்திலும் வேறு வேறு சோப்பு 44. குழந்தையும் தெய்வமும் ஒன்று குப்பைத்தொட்டி குழந்தைகள் செங்கல் கருங்கல் 45. ஆசைகள் எல்லாம் தூரப் போய் விடுகிறது பக்கத்தில் காதலி 46. ஒரே முறை வந்து போ முடிநரைத்தும் காத்திருக்கிறேன் மரணமே 47. கன்னித் தமிழ் கற்பிழந்தது ஆங்கிலக் கலப்பு 48. குயில்கள் இல்லாதக் காட்டில் மயில்கள் ஆடுகின்றன 49. விபச்சாரியை நடு வீட்டில் வைத்தேன் நாய்ப் பழமொழிதான் 50. கந்துவட்டி தடைச் சட்டம் கோயிலில் உண்டியல் 51. ஈர்த்து எரிக்கிறது கோயில் தீபம் விட்டில்களை 52. கண்ணாம்பொத்தியை கண் திறந்து விளையாடுகிறது காதல் 53. காதலி வந்துவிட்டாள் பாதி எழுந்து தோற்றேன் பாதிப் பிணமாக எரிந்தபோது 54. 'எங்க அம்மா எத்தனப் பேருக்குக் காதலி' நடிகையின் மகன் 55. கனம் அதிகம் கொஞ்சம் குறைத்து விட்டேன் எடைக் கல்லின் எடையை 56. அசதியில் மறந்து உறங்கி விட்டேன் படுக்கையறையில் 57. தாயின் தாலாட்டு இசையின் பின்னணியில் ஒப்பாரி 58. காதலிக்குத் திருமணம் மொய் எழுதினேன் கவிதைகளை 59. புரியாமல் வருகிறது தெரிந்தால் போய்விடுகிறது காதல் 60. புதுத்துணி போட்ட குழந்தையின் மகிழ்ச்சி காதல் 61. சொல்லாம் கொள்ளாமல் போய்விட்டது உயிர்க்காதல் 62. கூவத்தில் வெளுத்தேன் அழுக்கை 63. காதலர்கள் தற்கொலைக்கு அறிவியல் பெயர் வயிற்று வலி 64. பிச்சையின் கையில் ஒரு திருவோடு கோயிலில் நூறு உண்டியல் 65. பயிரில் பூச்சி கம்பியுட்டரில் வைரஸ் புரியாமல் விவசாயி 66. கடமையைச் செய் பலனை எதிர்பார் புதுமொழி 67. பாத்திரம் அறியாது பிச்சைபோட்டு விட்டோம் அரசியல்வாதி கட்சி தாவல் 68. பசுமையான நினைவுகள் நிழற்படங்கள் எல்லாம் கருப்பு வெள்ளை 69. எந்தப் பக்கம் பார்க்கிறாய் இறைவா காதலியோடு ஒதுங்கனும் 70. இந்தியாவுக்குள் மீண்டும் அந்நியர்கள் காதலர்கள் 71. கோயிலில் வாசகம் பிச்சைக்காரர்களுக்கு தரிசனம் இல்லை 72. காதலர்களுக்குத் திருமணம் பரிசுப் பொருள் லென்சு 73. உறங்கியதும் விழித்துக்கொண்டது கனவு 74. மலர்கள் வாடுகிறது பூக்கூடைக்காரி சிரித்துக் கொண்டிருக்கிறாள் 75. கடவுள் சிலையானான் கருங்கல்லால் அல்ல பொன்னால் 76. திருமண அழைப்பிதழில் என் பெயர் அச்சிடப்பட்டது மணவறையில் வேறொருவன் 77. தற்கொலை குற்றம் மரண தண்டனை குற்றம் எண்கவுன்டர்? 78. பெயரை கேட்டதும் காதலில் தோற்றேன் அவள் பெயர் 'லைலா' 79. காது செவிடாகிவிட்டது பக்தர்களிடம் கடவுள் 80. வைத்தது முற்றுப்புள்ளி போடப் போவது கோலம் 81. கல்வி வியாபரமாகி விட்டது சரஸ்வதி கையில் உண்டியல் 82. திருடர்கள் ஜாக்கிரதை கோயிலில் வாசகம் இறைவா பத்திரம் 83. குற்றவாளி வெட்கப்படமல் சரிக்கிறான் காமரா முன் 84. பணம் செய்யும் காதல் எல்லாம் கள்ள நோட்டுகள் 85. ஆடை களைந்தது மீன் கொத்தி ரோமியோக்கள் கைது 86. நடிகைக்கு லட்சங்கள் கூட கூட ஆடை நிர்வாணமாகிறது 87. கொடிகட்டிப் பறக்கிறது நடிகைகளின் மேலாடை 88. பிச்சை கேட்கிறாள் மகனிடம் தாய் பாசத்தை 89. காதல் கண்ணீருக்குப் பொறுப்பு ஏற்கிறது வெங்காயம் 90. பலருக்கு எதிர்காலம் சொன்னேன் எனக்கு மட்டும் வரவே இல்லை குடுகுடுப்பைகாரன் 91. ஆண்டாண்டுக்கு மாறுகிறது அழகு உலக அழகி Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 484 views கருத்துகள் 2. பாவ மன்னிப்பு கேட்டுக் 2. பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள் தேவாலயங்களில் இந்துக்கள் 3. காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு 4. குழந்தைகள் கூடி மண்சோறு சமைத்தார்கள் இறைவன் பசியாறினான் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
2. பாவ மன்னிப்பு கேட்டுக் 2. பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள் தேவாலயங்களில் இந்துக்கள் 3. காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு 4. குழந்தைகள் கூடி மண்சோறு சமைத்தார்கள் இறைவன் பசியாறினான் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162