nksonline's படம்

மீண்டும் சுனாமி ! மீளட்டும் மனிதர்கள் !
(கவலையுடன் ஓர் கவிதை - வேதாந்தகவியோகி நாகசுந்தரம்)
மீண்டும் சுனாமி !
ஜப்பானில் மீண்டும் சுனாமி !
ஜனித்தது சுனாமி என்மனதிலும் !
அதிர்ந்து நிலம் மட்டுமல்ல !
மக்களின் மனம் கூடத்தான் !
நிலவு நெருங்கினால்
திரைகடல் பொங்குமாம் !
நிலவு மனதின் அரசு ! அதனால்தான்
மனமும் பொங்குகிறது !
பொங்கிய மனதில்
தங்கிய சிந்தனை !
மனதே நீ இரக்கப்படு !
மரணித்த மனித குலத்தை பற்றி !
உறவென்று நினைப்பாய் !
ஜப்பான் மக்கள்
உழைப்பால் உயர்ந்தவர்கள் !
உயரம் குறைந்தாலும்
உழைப்பால் உயர்ந்தவர்கள் !
ரோபோட்டுக்களை படைத்தவர்கள்
இன்று ரோட்டுக்கு வந்தனரோ ?
அரட்டை அடித்துக்கொண்டு
கிரிக்கெட்டை பார்க்காமல்
அரண்டது உலகம் இன்று !
மனித குலமே !
நீ சுயநலத்தை சிறிது ஒதுக்கிவிடு !
பாதித்த மனித குலத்தைப்
பார்த்தாவது பயப்படு !
இறைவனே ! ஏன் இந்த கொடூரம் ?
உன்னை கருணைக்கடல்
என்று வர்ணிக்கிறார்கள் !
உப்புக்கடலில் மட்டும் சுனாமி !
உன் கருணைக்கடலில் என்று சுனாமி?
வைராக்யம் என்ற நிலநடுக்கம்
எங்கள் மனத்தில் வந்தால்தானோ
உன் கருணை சுனாமி பொங்கும் ?
உன் கருணை சுனாமியால்
எங்கள் காமக்ரோத கட்டிடங்கள்
கலைந்து விழட்டும் !
கூட்டம் கூட்டமாய் மனித குலத்தை
நீ எங்கே கொண்டு செல்கிறாய்?
பூமி பாரம் குறை என்பாய் !
பூமி பாரம் குறைய உனக்கு
பூக்களைப்போன்ற
மனிதர்கள்தானா கிடைத்தனர் ?
வேதத்தை நம்பி வாழ்பவர் நாங்கள் !
ஸ்ரீருத்ரம் கூறுகிறதே !
நீ மிகுந்த கோபக்காரன் என்று !
உன் கோபத்திற்கு வணக்கம் !
அப்படித்தானே அது அழைக்கிறது !
உன் கோபத்தின் சீற்றம் இன்று
சுனாமியாய் சீறியது !
உந்தன் அருகில் இருக்கும்
சக்தி சற்று நகர்ந்தாளோ ?
அழிக்கும் உனது ஆர்வம்
அகலவில்லை போலும் !
மனித குலமே இனிமேலாவது
நீ விழித்துக்கொள் !
சக மனிதனை சகோதரனாக நினை !
இல்லாவிட்டால் சுனாமியால் சங்கடம்தான் !
ஹரதி நிமேஷாத் காலத் ஸர்வம் என்றார் சங்கரர் !
இருக்கும்போதே இறைவனை நினைத்திடு !
காலம் கடத்தினால்
கொண்டுபோகும் சுனாமி !
யமஹா யமனாஷி என்று பெயர் வைத்ததால்
என்னமோ யமனின் ஆக்ஷி
சுனாமியாய் வந்ததோ ?
அணுகுண்டு போட்டபோது
அழிந்து போன ஜப்பான்
நிமிர்ந்து நிற்பதற்குள்
நமன் வந்தான் சுனாமியாய் !
ஆழ்கடலின் மீது எனக்கு
அளவற்ற கோபம் !
சுனாமியாய் சீறியதால் !
உன் அடியில் உள்ள
முத்துக்கள் போதவில்லை போலும் !
அதனால்தான்
முத்தான மனிதர்களை
உன்னில் மூழ்கடிக்கிறாயோ ?
நீ என்ன சோதனை செய்தாலும்
சோர்ந்திடமாட்டார் ஜப்பானியர் !
ஏனென்றால்
அவர்களுக்கு
சுனாமியிலேயே
சும்மிங் போட்டு பழக்கம் !
அவர்கள் சோர்ந்திடாதிருக்கு
அகில உலகமும் அவர்களுக்கு
ஆறுதல் சொல்லுவோம் !
சேர்த்து வைத்த சொத்தும்
சீறிப்பாயும் காரும்
ஒரு நொடியில் அழிந்ததே !
ஏ மனமே இதைக்கண்டும்
உனக்கு ஆசை ஏன் போகவில்லை ?
பர்த்ருஹரியின் வைராக்யம்
பட்டபின்னும் வரவில்லையா?
மனித நேயத்தை
மறந்திடாமல்
திறந்த மனதோடு
தீர்மானம் செய்யவேண்டும் !
அன்பும் உதவியும்
சக மனிதருக்கு செய்ய வேண்டும் !
பகைமை எண்ணமதை
போட்டுவிடு சுனாமி அலையில் !
நாகசாகியில் நலிந்து போனவர்கள்
தாகத்தோடு தரணியில்
தலைநிமிர்ந்து நிற்கவில்லையா ?
அதுபோல்
இந்த பேரழிவின் பின்னரும்
அவர்கள்
சுறுசுறுப்பாய் சுழன்றிடுவார் !
நம்பிக்கை கொண்டு விடு !
நமனை துரத்தி விடு !
கனவு காணு என்றார் கலாம் !
ஜப்பானியர் புதிதாக ஜனித்திடுவார் !
இக்கனவு கனிந்திடட்டும் !
துக்கம் மறையட்டும் !
துணைசெய்வாள்
திரிபுரையும் !
அம்மா நீ அகலாதே சிவனைவிட்டு !
சிறிது அகன்றாலும்
சிதைக்கின்றார் சுனாமியால் !
அருகில் நீ இருந்தால்
அழிந்திடுமோ உலகம் ஆழியினால் !
அதனால்
அம்மா நீ அகலாதே சிவனைவிட்டு !
நீ கடைக்கண்ணால் பார்த்துவிட்டால்
நீள் உலகம் நன்மை பெறும் !
ஊழி வெள்ளம் கூட
தாழியில் அடங்கி விடும் !
உன் கடைக்கண் பார்வை பட
உண்மையாய் வேண்டுகிறோம் !
ஊக்கம் நாங்கள் பெற
உன் அருளை வழங்கிவிடு !

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

நல்ல கருத்துக்கள்


7

நல்ல கருத்துக்கள்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


nksonline's படம்

நன்றி ! நாகசுந்தரம்.


நன்றி ! நாகசுந்தரம்.

vinoth's படம்

"ஆழ்கடலின் மீது எனக்கு அளவற்ற


6

"ஆழ்கடலின் மீது எனக்கு
அளவற்ற கோபம் !'

பூமியை நாம் சீரழித்தால் பாவம் கடல் என்ன செய்யும்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...