rajudranjit's படம்

சிவனேனென்றிருக்க சிக்கலில்லா பெரும் வாழ்வு
அவனை உள்ளம் நினைக்க யாருக்குமில்லை தீங்கு

சித்தர்களும் ஞானிகளும் சிந்தித்து தவம்புரிய‌
இல்லறம் கொண்டோன் கோயிலைத் தேடியோட‌

நல்லறம் நாளும் நமசிவாய என சொல்ல பயன்
அனைத்திலுமவனடக்கம் அதுவறியாமல் அலைவதேனோ

தென்னாடுடையவன் தாள் போற்றி வணங்கிட எல்லையில்லா பேரானந்தம் எந்நாட்டினருக்கும் இறைவனவனே

சிவஒலி சத்தியம் சொல்லும் சிவாயநம‌
சிவஒளி நிச்சயம் காக்கும் நமசிவாயமே

சிவசிவ எனச் சொல்ல மனதில‌முது பெருகிவர‌
சிவசிவ என நினைக்க நீக்கமற வாழ்வு சிறக்கும்

ஐம்பூதம் உள்ளடக்கி அனைத்திலும் அவனாகி
பிறவிப்பயன் உணர்த்தும் பரம்பொருள் நமசிவாயமே

நல்வினைகள் அனுகிவர தீவினைகள் ஓடி மறைய‌
நீ செய்யும் வினையிலும் அவனிருந்து உனைக்காக்க‌

நாளும் ஐந்தெழுத்து உச்சரிக்க வாழ்வில் உயர்வே
சிவாயநமவெனச் சொல்ல அபாயம் நீங்கி பெரும் வாழ்வே

ஓம் நமசிவாயமென அல்லல்கள் அறுந்துபோமே
ஓம் சிவாயநமவென நாம் பிறந்த பயனுண்டே உலகில்

ஆதியும் அந்தமும் அவனொருவனே ஹரஹர சிவனே
ஊழ்வினை உனையகல நித்தமும் சொல்லு சிவசிவயென‌

சொல்லி மாளாது சிவனின் பெருமைகள்
சிவசிவயென்றே மனதில் பூசித்து நலம் பல பெருகவே

என்றும்: சுஷ்ருவா

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

"ஊழ்வினை உனையகல நித்தமும்


8

"ஊழ்வினை உனையகல நித்தமும் சொல்லு சிவசிவயென‌"
எனும் வரிகளில் சிவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பது நிரூபனமாகி உள்ளது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது அல்லவா அதனால்தான் அந்த சிவன் உங்களையே அசைய வைத்து இந்தக் கவிதை மூலம் எங்களையும் இசைய வைத்துவிட்டான்.
அவனருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய என்று சொல்லுவோம் நல்லனவற்றையே நினைப்போம், சொல்லுவோம், செய்வோம். அருமையான கவிதை. வாழ்க வளமுடன்.

rajudranjit's படம்

ஐயா தாங்கள் சொல்வது உண்மை


ஐயா தாங்கள் சொல்வது உண்மை தான், என்னையுமறியாமல் சரசரவென இக்கவிதையை எழுதி முடித்துவிட்டேன், எப்படி எழுதினேன் என்று நினைத்துப் பார்த்தால் எனக்கு இன்னும் விளங்கவில்லை, எல்லாம் சிவமயம்!

aro...'s படம்

அன்பே சிவம்.... அதில் இன்பமே


5

அன்பே சிவம்.... அதில் இன்பமே வரம்...

அருமை... Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!

vinoth's படம்

அன்பும் சிவம் அனைத்தும்


3

அன்பும் சிவம்
அனைத்தும் சிவம்
ஓம் நமசிவாய


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!