பூவைப்போல சிரிக்க வேணும் பாப்பா-நீ
புகழ் பெறவே வளர வேணும் பாப்பா!
நல்லவற்றைப் படிக்க வேணும் பாப்பா-நீ
நடக்க வேணும் அதுபோல பாப்பா!
அன்னை தந்தை தெய்வமுனக்கு பாப்பா-நீ
அவர்கள் பாதம் பணிய வேணும் பாப்பா!
கூடி வாழப் பழக வேணும் பாப்பா
நம் கூட்டுறவே நாட்டுயர்வு பாப்பா!
நமது நாடு நமது கண்ணே பாப்பா-நீ
நாடு உயர உழைக்க வணும் பாப்பாஆ
உலகம் வியக்க உயர வேணும் பாப்பா-நீ
உறுதியோடு வெற்றி பெறுக பாப்பா!
நன்றி; நண்பர் கே. பெரியசாமி-உறையூர்
இத்தளம் சிறுவர்கள் (மட்டும்) படிக்கும் தளமாக மாற்றப்பட்டுவிட்டதால் இந்த சிறப்புக் கவிதை. நன்றி. 
(7 votes)




