சிரிப்பு..

URI: http://tamilnanbargal.com/node/2947113 கருத்துகள்2175 views
dharshi's படம்

மூளை முன் மொழிய
முகம் முடிவெடுக்க
உதடுகள் ஒத்துக் கொண்டு
வாய்வழி அனுப்பும்
அற்புத மலர்

சிரிப்பு...
சிநேகத்தின் வரவு..

சிரிப்பு...
சிந்தனையின் முதிர்ச்சி..

சிரிப்பு...
அன்பின் வரவேற்புரை..

சிரிப்பு...
அவசர உலகின்
இடைக்கால நிவாரணி..

சிரிப்பு...
நோய்களை விரட்டும்
இயற்க்கை மருத்துவம்..

சிரிப்பதில் சிக்கனமா?

சிரித்துச் சிரித்து
உங்களுக்கு நீங்களே
மருத்துவம் பாருங்கள்..

இல்லை என்றால்
என் ஆட்சியில் வரும்
இப்படி ஒரு சட்டம்
"சிரிக்கத் தெரியாதவனுக்கு சிறை"

__

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/
http://thamilarjothidam.blogspot.com/

7.27273
Your rating: None Average: 7.3 (11 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்
0

சிரிப்பு என்பதைப் பற்றி - இப்படி
விரித்து எழுதியதைப் பாராட்டலாம்...
மூளைக்கு வேலை வழங்கும்
நகைச்சுவையாலே எழும்
சிரிப்புக்கே
நோய்களை விரட்டும்
மருத்துவ சக்தி இருப்பதாய்
நானறிவேன்!
நீங்கள் ஆட்சிக்கு வருவது உறுதி...
சட்டம் இயற்றும் போது
நகைச்சுவை ஊட்டியும்
"சிரிக்கத் தெரியாதவனுக்கு சிறை" என
மாற்றம் செய்தால்
நாட்டு மக்கள் நீண்ட காலம் வாழ்வார்களே!

0

வணக்கம் தோழி,

எப்பவும் போல் தங்களின் கவி வரிகள் மிகவும் அருமை...."சிரிப்பு...
நோய்களை விரட்டும்
இயற்க்கை மருத்துவம்.."

உண்மைத் தான்..... தோழி.....

என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com

0

குறும்புக் கவிதை, அரும்பு தொடுத்தது போல் அழகாகவும் அறிவாகவும் உள்ளது! நல்ல சிந்தனை சிரிப்பின் விளக்கமும் சிரிக்காதவருக்கு சிறையிடும் எண்ணமும் உயர்ந்த நோக்கம் உள்ளவருக்கே வரும்! இன்னும் தாங்கள் உயர வாழ்த்துக்கள்!

0

சிரிப்புக்கு லக்கணம் வகுத்த
சிந்தனை சிற்பியே
நின் புகழ் வாழ்க......... நின் கலை வாழ்க

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா

புதிய கருத்தை சேர்