aro...'s படம்

"சாதி கேட்டதுண்டா...............?"

எங்கும் சாதி எதிலும் சாதி;
சாதியென்றசகதியில் குளித்து
சாதியை அடையாளமிட்டு
சமுகத்தை சூனியமாக்கும்
சூழ்ச்சிகாரர்களே...?
இவர்களிடமும் கேளுங்களேன்
சாதியை....!?

படுக்கை விரித்து படுத்து
காம இச்சையை காசாக்கி
எச்சிலால் எல்லாடத்தையும்
நனைத்து எழும் விலைமகளிடம்
நீகேட்டதுண்டா.........?

இரு பால்கலப்பால்
எப்பால் என புரியாமல்
முகவரி தொலைத்த
உறவுகளிடம் கேள்;
"குறிப்பிட்ட சாதியிலிருந்து
மட்டும்தான்
வந்தீர்களா.............?"

அறுவை சிகிச்சையில்
செலுத்தப்பட்ட ரத்ததிற்கு
நீ கேட்டதுண்டா..?
எந்த சாதி ரத்தமென‌
அந்த மருத்துவனிடமாவது கேட்டதுண்டா..?
எந்த சாதிகாரனென்று..?

உணவிட்டு உயிர்காத்து
உடல் வளர; உழைத்து காத்த
உழவனிடம் கேட்டதுண்டா சாதியை...?
வேறு சாதிக்காரன் வியர்வை
விழுந்த சேற்றில்
விளைந்த சோற்றை
உண்டதில்லையா நீ ஒரு போதும்....?

கேவலம்....
வெள்ளை சுருட்டின் வெந்த உடம்பின்
கடசி நெருப்பை கடனாகதந்து
உன் சுருட்டை உயிர்ப்பித்தவனிடமாவது
கேட்டதுண்டா... சாதியை....?

வயிற்று பசிக்கு சோறு போட்டவன்
வட்டிக்கு பணம் கொடுத்தவன்
பேருந்து நெரிசலில்
உட்கார இடம் கொடுத்தவன்
இவன்களில் எவனிடமாவது
என்றாவது கேட்டதுண்டா...?
சாதியை....?

வேசியுடன் படுக்க சாதி தேவையில்லை;
வேலைக்கு வேண்டும் சாதியிங்கே...
கடன்வாங்க சாதி கேட்க மாட்டான்
கல்வி பணிக்கு சாதி கேட்பான்;
சாதி என்பது தவறுயென‌
தெரிந்தாலும்.........

பின் ஏனடா.......
சாதி சகதியை...
பூசிக்கொண்டு பூரிப்படைகிறாய்.?
சாதியோடு இங்கு வாழமுடியது
சாதி ஓடும் வரை வாழ்வு புரியாது.
இனிமேலும் சாதிபார்ப்பவன்
நரம் தின்னும் நாயின்
மலம் தின்னும்
ஈனனே........??! Dingue

8.6
Your rating: None Average: 8.6 (10 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

சாதி பார்ப்பவன் சாதிப்பது


10

சாதி பார்ப்பவன் சாதிப்பது ஒன்றுமில்லை.
வேற்றுமையைத்தான் வளர்ப்பான். ஒற்றுமை சீர்குலையும். அவந‌ம்பிக்கை மேலோங்கும். மனிதத் தன்மையே அழிந்துபடும். இதனால்தான் ஔவையாரும்:

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

என்று அன்றே சொல்லிவைத்தார். இது யாருக்குப் புரிகிறது? நல்ல கருத்தினைக் கொண்ட கவிதையை எழுதிய அரோவுக்கு என் பாராட்டுக்கள். சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நாம் எதிர்பார்ப்போமே!

aro...'s படம்

என் சிரம் தாழ்ந்த நன்றி


என் சிரம் தாழ்ந்த நன்றி ஐயா..... bye


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

சிறந்த கருத்துகளைக் கொண்ட


7

சிறந்த கருத்துகளைக் கொண்ட நல்ல கவிதை.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


aro...'s படம்

நன்றிக்கு மார்று சொல்


நன்றிக்கு மார்று சொல் காணாததால் நன்றி என்ற சொல்லயே தங்களுக்கும் உரித்தாக்குகிறேன்.... bye


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


rajudranjit's படம்

நண்பரே சாட்டை சுழற்றிய


9

Clap Clap Clap Clap Clap Clap

நண்பரே சாட்டை சுழற்றிய விதத்திற்கு தங்களுக்கு ஒரு சபாஷ்!

எனது எண்ணங்களையே தாங்களும் பிரதிபலித்துள்ளவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியே நண்பரே!

விடாதீர் இன்னும் சூடு கொடுங்கள் மக்களாயம்(சமூகம்) பயன்பெற!

aro...'s படம்

சாட்டையடி என சொல்லி என்


சாட்டையடி என சொல்லி என் கவிதைக்கு ஓட்டு போட்ட தங்களுக்கும் நன்றி bye


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


vinoth's படம்

சாதிவெறிக்கு ஒரு சாட்டையடி


8

சாதிவெறிக்கு ஒரு சாட்டையடி
Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


meenavignesh's படம்

அருமையான படைப்பு,


10

அருமையான படைப்பு, Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap


மீனா விக்னேஷ்