இன்னதென உலகம்
இதுவென தறியாமல்
பண்ணிய பாவங்கள்
பெற்றதொரு குழந்தை
ஓழமிட்டு அழுக,
உச்சிதனை முகர்ந்து
நெற்றியில் முத்தமிட்டு
பாலூட்டி சீராட்ட,
விதைத்தநெல் முளைக்காமல்
பருவமழை பொய்த்துவிட
பெற்றகடன் தொட்டிலிலே
பட்டகடன் வாசலிலே,
பாதிமுகம் சிரிக்கையிலே
மீதிமுகம் கோணலிலே
பாவிமகள் பிறந்தாளென்று
பார்நிரப்ப வந்தாளென்று
ஊர்ப்பேச்சு கேட்கையிலே,
கள்ளி மடிபிடித்து
பால்மணம் மாறுமுன்னே
கள்ளிப்பால் கொடுத்தாயோ
கல்நெஞ்சன் ஆனாயோ
கட்டையிலே போகுமுன்னே
சாகாவரம் கேட்டாயோ?
(3 votes)
கருத்துகள்
கவிதை மிகவும் நன்று! ஆனால்
Submitted by rajudranjit on ஞாயிறு, 06/11/2011 - 5:56am.
கவிதை மிகவும் நன்று! ஆனால் பதிவதற்கு முன் ஒரு தரம் எழுதியுள்ளதை சரி பார்த்துக் கொண்டால் நல்லது கரணம் ஓளமிட்டு என்பது "ஓழமிட்டு" என்று இருக்கின்றது












