sentamildasan's படம்

நல்லா சோடிச்சுக்கிட்டு போகுது
ரோட்டுல ஒரு பொண்ணு
அதப்பாத்துதானே ஏங்குது
வாலிபவயசு கண்ணு
சினிமா படம் பாத்துப்புட்டு
அதபோல நெனக்குது-அத
நெனச்சு நெனச்சுத்தானே
தன் வாழ்க்கைய கெடுக்குது.

உண்மைய சொல்றேன்
உண்மைய சொல்றேன்னு
படமும்தானே எடுக்குறான்
கெட்டதுகள எப்படி
செய்யணுன்னு விளக்கம்
தானே கொடுக்கிறான்
அதபாத்துப்புட்டு சமுதாயம்
பாடம்தானே படிக்குது
சொன்னத செஞ்சுபாக்க
மனசும்தானே கெட்டுதுடிக்குது.

என்னன்னமோ படிக்கிறான்
வெளிநாடு போயும் படிக்கிறான்
வேலைவெட்டி இல்லாம
சிலர் வெட்டியா சுத்துறான்
தாய்மொழிய துாரவச்சு
வேறமொழி பேசுறான்
கல்லுத்தடுக்கி கீழ விழுந்தா
அம்மான்னு அலறுறான்.

எதைஎதையோ கண்டுபிடிச்சு
வாழ்க்கைய சொகுசாக்கிறான்
நாங்க இந்த சாதின்னு
கண்டுபிடிச்சு கொடியதானே துாக்குறான்
சாதிசனம் கூடி இங்கு
சாதிகட்சி ஆயாச்சு
இதயே காரணம் வச்சு
மனசும் மிருக குணமாச்சு.

இயற்கைய நம்பித்தானே
வெள்ளாம செய்யிறான்
பாவம்
வெள்ளம் வந்து அழிக்குது
இல்ல வெயிலடுச்சு கருகுது
வட்டி நல்ல குட்டிபோட்டு
கட்டாம விட்டுப்போட்டு
நிலத்தையும் விக்கறான் ஏழை
துாக்குல தொங்குறான்.

பதினாறு வயசினிலே
பள்ளிக்கூடம் போகயிலே
கழிப்பறை வாசலிலே
கொழந்த பொறக்குது-அதுக்கு
தகப்பனாரு யாருன்னுதான்
விசாரணை நடக்குது
காலம் கெட்டுப்போச்சு
காதலும் கோணலாச்சு.

கோயிலுகள கட்டிவச்சு
வருமானம் பாக்குறான்
சாமிகள பாக்குறதுக்கு
நோட்டுகள கேட்குறான்.

இதஎங்கபோயி சொல்ல
மனம் கத்துது உடம்புக்குள்ள....
கத்துது உடம்புக்குள்ள....

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

நண்பரே அதிகம் சிந்திக்காதீர்!


4

நண்பரே அதிகம் சிந்திக்காதீர்! எல்லாம் நல்லதாக வேண்டுமானால் மனிதயினமே உலகில் இருக்கக் கூடாது என்று கூட தோன்றும், எதனால் இப்படி என்றால் நாமும் மனிதனாகப் பிறந்ததனால் தான், அதனால் தங்களைப் பற்றி சிந்திக்க பழகுங்கள் கொஞ்சம், எல்லாம் சரியாகும்!