இரண்டாயிரத்து பன்னிரென்டில் அழியுமாமே
சித்தரொருவர் சொல்ல உலகமது கேட்டதிர
நித்தம் நித்தம் சாகுறவன் சிரித்து கொண்டுபோக
சத்தமில்லை குத்தமில்லை காரணம் கேளேன்
புத்தனுக்கு போதிமரம் மத்தவனுக்கு பேதியென
நம்புகின்ற நரனுக்கெல்லாம் இதுவே கதியெனவாக
நொடியினிலே நடப்பதென்ன யாரறிவார் அறியோம்
விடிகின்ற பொழுதினிலே நல்லதொரு ஆக்கம் வேணும்
கூழுக்கு உழைக்கவேணும் அது வயித்துக்கு செல்லவேணும்
ஆட்டி படைக்கும் கடவுளுக்கு தெரியுமா
வட்டியிலே வாழ்க்கை உருளுவது புரியுமா
சட்டியும் கையும் கெஞ்சுவது அறியுமா
ஆளென அவனிருக்க ஆண்டவன் நாமம் சொல்லி
மீளா துயரென துன்பம் தான் நகையாட துள்ளி
சுடுகின்ற விறகு நுனி தலைசொறிய அதுவே கொல்லி
அறியாமல் செய்தவனுக்கு கட்டணம் உண்டு
தெரியாமல் செய்பவனுக்கும் கட்டணம் உண்டு
அவையறிந்து செய்பவனுக்கு கட்டணம் என்ன?
மாயமான் உருவெடுக்க மாரீசன் ஆகினான்
அதியமான் உருவெடுத்து நெல்லிக்கனி நல்கினான்
விதியது விரும்பி வர விலகி செல்ல நாம் யாரோ
புதியது படைக்க புருஷோத்தமன் மனம் வைக்க
சதியது பின்தொடர பதியவன் என் செய்வான்
கதியென விட்டு செல்ல காரியம் ஒன்றுமில்லை
கண்டவரென்று காணாமல் செல்லயியலாது பாரும்
சொன்னவர் சித்தரென்றால் சிந்திக்க வேண்டுமன்றோ
சித்தனென்றால் சிவன் வாக்கு மெய்ப்பிக்குமோ
எல்லோரும் வாழவேண்டும் அவன் அருள் புரியவே
நல்லோராய் வாழவேண்டும் நல்புத்தி அருள் புரியவே
எமனுக்கும் சாவு வர சத்தியமே சாகாவரம்
கருத்துகள்
அருமையான கவிதை. எவனுக்கு சாவு
அருமையான கவிதை. எவனுக்கு சாவு வந்தாலும் அந்த எமனுக்கு சாவு வராது.
பாராட்டுக்கள்
சாவு வருமென ஏக்கம்
சாவு வருமென ஏக்கம் வேண்டாம்
2012 இல் உலகழிவு என்பது
ஆளுக்காள் எடுத்துச் சொன்னாலும்
நாம் அழிவோமெனச் சொன்னவர் யார்?
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
" ஆட்டி படைக்கும்
"
ஆட்டி படைக்கும் கடவுளுக்கு தெரியுமா
வட்டியிலே வாழ்க்கை உருளுவது புரியுமா
சட்டியும் கையும் கெஞ்சுவது அறியுமா"
அருமை. அடுத்தவர் கஷ்டத்தை அறிந்து தெளிந்த வரிகள்......








