kumaran's படம்

கட்டிக் கரும்பே ! கைவீசு !
கண்ணே ! மணியே ! கைவீசு !
சுட்டிக் குழந்தாய் ! கைவீசு !
சூடா மலரே ! கைவீசு !

தேனை ! பாலே ! கைவீசு !
தென்றல் காற்றே ! கைவீசு !
மானே ! மயிலே ! கைவீசு !
மதியின் வடிவே ! கைவீசு !

கன்னல் சாறே ! அழாதே !
கண்டே ! பாகே ! அழாதே !
மன்னும் மதியே ! அழாதே !
மங்கல விளக்கே ! அழாதே !

சோலை மலரே ! அழாதே !
சொக்குத் தங்கமே ! அழாதே !
காலைக் கதிரே ! அழாதே !
கதலிக் கனியே ! அழாதே !
**************************
teddy

0
Your rating: None

கருத்துகள்

uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


chandru2110's படம்

பாரதியார் ரேஞ்சுக்கு கவிதை


பாரதியார் ரேஞ்சுக்கு கவிதை எழுதுறீங்க.


சந்துரு