sentamildasan's படம்

ஆலமரத்தில ரெண்டு
சோடிக்கிளி ஆலோலம் பாடுதடி
இத பாத்துவந்த
மாமன்மனசுல உன்
நெனப்பு கூடுதடி....

கம்மாகரையோரம்
கால் நடந்து போகயிலே
சும்மா நிக்காதகண்ணு
பாத்ததடி அந்த
காட்சியத்தான்,
ஒத்தகாலில் நின்னு
கொக்குஒன்னு கெண்ட
மீனத்தான் தேடுதடி
இந்த அத்தமகன்
உன்னை கைபுடிச்ச
காட்சியெல்லாம் தெரியுதடி.....

காலையில கண்ணுமுழுச்சேன்
உன்னோட முகத்தில
அந்த நிலவுமுகம் பாத்துப்புட்டு
இன்னும் விடியலன்னு நெனச்சுப்புட்டு
படுத்தேன்டி பாயில....

மண்பானை தண்ணிபோல
உன்ன நெனச்சா மனம்
குளிருதடி ராசாத்தி
செவந்த உம்முகம் கண்டு
செந்தாமரை நோகுதடி ராசாத்தி
செவக்கநீ வெத்தல போட்டா
கோவாப்பழ சுவைதான்டி ராசாத்தி....

சிரிச்சு என்ன மயக்கிப்புட்ட
உன் சிறுகண்ணில் மாட்டிக்கிட்டேன்
கையோடு கைசேர்த்து ராசாத்தி
இந்த உலகத்த ரசிக்கப்போறேன்
உனக்கு பூச்சூட்டி..........

8.5
Your rating: None Average: 8.5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

கற்பனை நல்லாயிருக்கு


7

கற்பனை நல்லாயிருக்கு


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

உனக்கு


10

உனக்கு பூச்சூடி.......(உச்சிமுகந்து உறுதுணையா நானிருப்பேன்) சும்மா தாங்கள் விட்டதை தொடர்ந்தேன் அவ்வளவுதான்,அருமை!

nilaamathy's படம்

கிராமத்து வாசனையுடன் கவிதை


கிராமத்து வாசனையுடன் கவிதை அழகாய் இருக்கிறது