"
சந்திக்குஞ் சமயத்திற் சிந்திக்க மறந்துஅஞ்சி
நிந்திக்கும் அறிவை நித்தங் கேளாமல்-மட நெஞ்சே
பந்திக்கு முந்திப் புகுவதுபோல் பாய்ந்துசென்று
வந்தவளைத் தேடாதே கேள்..!!
அந்திக்குத் தத்தித்தத் தித்தாவும் பறவைபோல்
மந்திக்கு மறுவடிவாய்க் கிளைதாவும் மனமே நில்..!!
சிந்திக்க மறந்துசில் வண்டாகிரீங் கரித்து
தந்தியனுப் பிடாதே கேள்..!!
உந்தியுந் தியேயுற வாடிடத் தள்ளினும்..!!
தொந்திநி றைந்துவிட்டால றுசுவையு மறியாது..!!
ஐந்திரண்டு திங்களிற் றத்தனையுங் கசக்குமே..!!
இந்திரிய மடக்கிவாழ் கேள்..!!
"
பேயாயுழலுஞ் சிறுமனமே என்ற கருத்தினால் எம்
கருத்தில் உதித்த பாடலிது..!!
மனம் ஒரு மரம்விட்டு மரம் தாவும் குரங்கு ..!!
அதைக் கட்டுக்குள் வைத்திருப்பவனே மனிதனாகவும்,
பின்னாளில் மகானாகவும் ஆகிறான்..!!
நன்றி..!!!
கருத்துகள்
பந்திக்கு முந்திப்
பந்திக்கு முந்திப் புகுவதுபோல் பாய்ந்துசென்று
வந்தவளைத் தேடாதே கேள்..!!
மந்திக்கு மறுவடிவாய்க் கிளைதாவும் மனமே நில்..!!
தொந்திநி றைந்துவிட்டால றுசுவையு மறியாது..!!
ஆகா அற்புதமான வார்த்தை கோர்வைகள்..!!
இன்னொரு பட்டினத்தாரை பார்த்துவிட்டேன்...!!
நன்றி....!!
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
இது தன்னடக்கம் .... உங்கள்
இது தன்னடக்கம் ....
உங்கள் கவித்திறமையை சொன்னேன்... தோழா..!!
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
இதுபோல் தொடர்ந்து
இதுபோல் தொடர்ந்து எழுதலாமே.... தோழா..
நாங்களும் உங்கள் கவி அருவியில் கொஞ்சம் பருக....
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அற்புதம்! தங்கள் தமிழ்
அற்புதம்!
தங்கள் தமிழ் புலமைக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...





