நிலா நிலா ஓடி வா
நிலாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட அட்ட நிலவே
வண்ண முகில்ப் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா!
*
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்!
*
குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து!

கருத்துகள்
நிலா நிலா ஓடி வா நில்லாமல்
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சின்ன வயதை சிறைப்பிடித்துக்
சின்ன வயதை சிறைப்பிடித்துக் கொண்டுவந்தது பாட்டு அருமை
அன்புடன்
பாலன்






