உன் முகம் என் சந்தோசத்தின்
சேமிப்பிடம்
உன் சிரிப்பு என் சோகத்தின்
அரு மருந்து
உன் கபடமில்லா மனது
சமுதாய தேவை
உன் பிஞ்சு விரல்கள் தொடுணர்வு
பிறவிபயன்
தூக்கத்தில் உன் திடீர் அழுகுரல்
உன் உளறல் ,உன் தும்மல் ,விக்கல்
செவிக்கு விருந்து
நீ கருவில் இருந்தாலே பெண்ணின்
பெயர் மாற்றம் (கர்ப்பிணி)
நீ பிறந்தாலே அனைவருக்கும்
உறவு உயர்வு
உன் ஒவ்வொரு அசைவுகளும்
ஒப்பிட முடியா அழகு
உன்னை பெற்றால் தான் பெண்மை நிறைவு
உன்னை பார்தாலே மன நிறைவு
குழந்தை இல்லா வீடு
மழையில்லா பூமி,அலையற்ற கடல்
(1 vote)




