கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
குலதெய்வசாமிக்கு பொங்கலிட்டு கும்மிய கொட்டுங்க
குதிரைமேல உக்காந்திருக்கும் உருத்திரர்சாமி
கண்ணுமுழி விரித்திருக்க காலனையே விரட்டிடுமே
காலமெல்லாம் காத்திடுமே கவலையே போக்கிடுமே
(கொ,கொ குலதெய்வ பொ கொ)
முளைப்பாரி முளைக்கவைத்து முன்னவைத்தோம்
ஊருநிலைமை செழிப்பாக செழித்திடவே
ருத்திரர் மீசை வளர்ந்திருக்கு வளமாக
அதுபோல வளம் பெருகிடவே
(கொ,கொ,கும்மிய கொ, குல பொ கொ)
உதட்டுச் சிரிப்பு ஓரத்தில ஒய்யாரம்
மக்கள்மனதில் மகிழ்ச்சி பொங்கிடதுபோலே
வீரம் நிறைந்த ருத்திரரு ஆசிய வழங்கிடவே
எம்மக்கள் கவலை போக்கிடவே
(கொ,கொ,கும்மிய கொ, குல பொ கொ)
சித்தரை பெளர்ணமி நந்நாளில் நிலவதுபோலே
செழித்து வளர குடும்பமெல்லாம் கூடிமகிழ்ந்திடவே
வாழ்த்திட வரும் ருத்திரரு குதிரையிலேமர்ந்திருக்க
கும்பிடு கும்பிடு ருத்திரர் பாதம்
(கொ,கொ,கும்மிய கொ, குல பொ கொ)
இதுவொரு முயற்சி மட்டுமே அன்பர்களின் கருத்தைப் பொருத்து நல்ல கும்மிப்பாட்டு ஒன்று பதிய ஆவல்
என்றும்: சுஷ்ருவா
கருத்துகள்
முயற்சியைத் தொடர வாழ்த்துகள்
முயற்சியைத் தொடர வாழ்த்துகள்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
தொடங்க வாழ்த்துக்கள்!!!!
தொடங்க வாழ்த்துக்கள்!!!! 









