aro...'s படம்

குப்பைதொட்டியிலிருந்து குரல்.........

பெண்குழந்தை என்பதாலா...?
என்னை குப்பைத்தொட்டியில் போட்டாய்...!
கருவறையில் வளர்ந்த எனக்கு
தெருமுனையில் தானா தேவருலகம்;
பாதையில் போட்டால்
பார்ப்பவர் கண்
பகலவனாய் சுடும் என்பதாலா.....?
குப்பைத்தொட்டியில் போட்டு
குளிரவைத்தாய்.......!

கொடுமை என அழவில்லை
கொட்டாதே குப்பையென அழுகிறேன்
பால்சுரந்த மார்பு வலிக்கவில்லையா...?
எனக்கு இல்லாமல் யாருக்காய்
அதை சேர்த்துவைக்கிறாய்...?
மடிமீது இன்னும் படுக்கவில்லையே...?
அதற்குள் என்ன அவசரம்
அம்மா........!
குப்பைத்தொட்டிக்கு குடிமாற்றிவைத்தாய்.....?
கருவறையை காலி செய்யத்தான்
காத்திருந்தாயோ இத்தனை நாள்..?
இறைவனிடம் வெண்டிக்கொள்கிறேன்
வேண்டாம் உனக்கு இன்னொரு
பெண் குழந்தை என..? Sad Crying Sad

6.55556
Your rating: None Average: 6.6 (9 votes)

கருத்துகள்

umami12's படம்

உங்கள் கவிதை பற்றி சொல்ல


10

உங்கள் கவிதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. Clap Clap Clap


uma


aro...'s படம்

எந்த மொழியில் தமிழிலா...?


எந்த மொழியில் தமிழிலா...? ஆங்கிலத்திலா.........?

ஆனால் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...தோழி.. teddy


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


umami12's படம்

அன்புக்கும் காதலுக்கும்,அழகான


அன்புக்கும் காதலுக்கும்,அழகான படைப்புகளுக்கும்,அதை பாராட்டவும் மொழி முக்கியமல்ல தோழா! Clap Clap Clap


uma


vinoth's படம்

வாரத்தைகளில் பிழிந்தெடுத்த


7

வாரத்தைகளில் பிழிந்தெடுத்த சோகம் Crying

மிக அருமை

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

பெண்ணைப் பெற்ற


7

பெண்ணைப் பெற்ற அம்மாவே
கருவறையை விட்டு வெளியேறிய
குழந்தையின் தொப்புள் கொடி அறுத்ததும்
குப்பைத் தொட்டிக்குள் போட்டால்
பெற்றவளின் முகவரி தேடும்
உலகத்திற்கும் பெற்ற குழந்தைக்கும்
பதில் கூறு தாயே என்று தான்
என்னால் கேட்க முடியும்!
குழந்தையின் நிலையை
என் பா அடிகளில்
அடக்கி விட முடியாதே!
குப்பைத் தொட்டிகளில் இருந்து எழும் குரலி்ல்
இன்னும் எத்தனையோ இருக்கும்
நண்பா - உன்
பா அடிகளில் வெளிக்காட்டு!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

(No subject)


4

Crying


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


rajudranjit's படம்

பெண்ணே பெண்ணுக்கு எதிரி


6

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பதை தான் இது குறிக்கிறது! ஆனாலும் ஆண் இனம் தான் துடிக்கிறது இந்த அவலம் கண்டு! நன்றி நண்பரே! Clap

selvakumaar's படம்

உங்கள் கவிதையைப் படிக்கும்


8

உங்கள் கவிதையைப் படிக்கும் போது ரசிக்க முடியவில்லை. இந்த சமூகதின் மீதும், சமூதாயத்தின் மீதும் கோபம் தான் எழுகிறது. நல்ல கவிதை நண்பா.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்