காரணமில்லாமல் சில கவிதைகள்
மௌனமாய்
மனம் மூடி இருந்தும்
மானசீக எழுத்துகள்
காரணமே இல்லாமல்
மனதின் வாசலில்
முட்டும் போது
மறுக்க முடியவில்லை!
விழியடைத்தும் பயனில்லை
வழிதேடி வந்து விடுகிறது!
எழுதுகிறேன்.. எழுத்துகளை...
எழுத்துகள் கவிதைகளாகி
எழுந்து நிற்கின்றன
ஏதோ ஒரு காரணத்தோடு...
காரணமில்லாமல்
சில கவிதைகள் !
--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth
கருத்துகள்
காரணமில்லாமல் சில கவிதைகள்
காரணமில்லாமல் சில கவிதைகள் தோன்றுகின்றன என்றால் ஏதோ ஒரு காரணத்தோடுதான் அவை அங்கே வந்து விழுந்திருக்கின்றன..காரணத்தைக் கண்டுபிடியுங்கள்...பின்பு புரியும்.
சீர்திருத்தத்தை சிந்திக்க
சீர்திருத்தத்தை சிந்திக்க சிந்திக்க சிந்தனை உயர்வடையும் அதுவொரு காரணமாகயிருக்குமோ? தீயது செய்பவர்களின் செயலது கண்டு எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்பதாக ஒரு காரணம் அமைந்திருக்குமோ?
எப்படியாயினும் ஐயா பொன்வண்ணன் அவர்கள் சொன்னதைப் போல் கண்டுபிடியுங்கள் நண்பரே! எங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆவல் நண்பரே!
உண்மைப் பாவலனின்
உண்மைப் பாவலனின் கருத்தாக
தங்கள் பா எனக்குப் புரிகிறது.
பாவலனின் உள்ளத்தில்
ஏதாவது முளைத்தால்
பாவாகத்தான் வெளிப்படும் என்ற
காரணத்தால்
எண்ணற்ற பாக்கள்...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
என் பாவிற்கு எதிர்ப்"பா"
என் பாவிற்கு எதிர்ப்"பா" யப்பா அருமையா இருக்குதப்பா.............. 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்










