rajudranjit's படம்

மாற்றம்.........
வருமென எதிர்நோக்கி
காத்திருப்பு!

நேரம்..........
நல்லதென வர எதிர்நோக்கி
காத்திருப்பு!

வரவு...........
வந்தால் வாழ்வு சிறக்குமென‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

காதலரை.............
காலம் சேர்க்குமென‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

அன்னை...........
மீண்டும் மடி தருவாளென‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

இளமை.............
மீண்டும் புத்துணர்ச்சி பெற‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

நல்லவர்கள்............
நட்பென அமைய
எதிர்நோக்கி காத்திருப்பு!

கடவுள்............
அருளது பெற‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

வெற்றி...........
நாம் பெறுவோமென‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

காத்திருப்பு............
இப்படித்தான் காலங்கள்
கரைந்தன காத்திருந்து!

முயற்சி...........
காத்திருக்காது உயர்த்தும்
உன்னை காத்திருப்பிலிருந்து!

6
Your rating: None Average: 6 (3 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

நாம் எதற்கெதற்கோ


5

நாம் எதற்கெதற்கோ காத்திருக்கிறோம். ஆனால் கால்ம் நமக்காகக் காத்திருப்பதில்லையே.

எனினும் நம்பிக்கையே வாழ்க்கை. காதிருப்போம் நாமும் நல்ல வாழ்க்கை அமையும் என்று.

கையில் காசிருந்தால் நீ காத்திருப்பதில் அர்த்தமுண்டு. அது இல்லாவிட்டால் இந்த உலகம் உனக்காக காத்திருக்காது.

வாழ்த்துகள்.

rajudranjit's படம்

ஐயா கடைசி வரிகள்(கையில்


ஐயா கடைசி வரிகள்(கையில் காசிருந்தால் நீ காத்திருப்பதில் அர்த்தமுண்டு. அது இல்லாவிட்டால் இந்த உலகம் உனக்காக காத்திருக்காது) உண்மையானது!

நன்றி ஐயா!

yarlpavanan's படம்

காத்திருந்து


8

காத்திருந்து காத்திருந்து
காலம் தான் கரையுமே
முயற்சி இருக்கும் போதும்
முடிவுக்குக் காத்திருந்தால் தப்பில்லை!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நன்றி அன்பரே!


நன்றி அன்பரே!

vinoth's படம்

காத்திருக்காமல் காரியமாற்ற


5

காத்திருக்காமல் காரியமாற்ற சொல்லும் அழகான கவிதை.
Innocent


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

காத்திருந்து காத்திருந்து


காத்திருந்து காத்திருந்து முயற்சியில்லாமல் வீணாகப் போனவர்கள் ஏராளம் நண்பரே! அதுதான் சிந்தனை இப்படியொருக் கவிதையென!