vinoth's படம்

காதல் விற்பனைக்கு

காதல் பெயர் சொல்லி
கடைகளில் விற்பனையாகிறது காதல்!

ஏதோ எதிர்பார்த்த காதலிக்கு
ஒரு வாழ்த்து அட்டையா?
ஒரு சிறப்பு பரிசா?
ஏனோ புரியவில்லை.

எனக்கு என்ன பரிசு தருவாய்?
கடை கடையாய் அலைகிறது காதல்
காதலின் ஒற்றை கேள்விக்காய் !

பொன்னா? இல்லை வைரமா?
விலை தான் காதலின் ஆழமாம்!
விளம்பரத்தால் விற்பனையாகிறது காதல்
நகை கடைகளில்!

காதல்தினம் முடிந்த பிறகு சண்டையிட்டிருக்கலாமோ?
சில பரிசுகளாவது கிடைத்திருக்கும் - இப்படியும்
சில காதல்கள்?

இன்று மட்டும் செய்தி அனுப்பினால் அதிக விலை
தொலைபேசி நிறுவனங்கள் சொல்கின்றன
ஆனால் எத்தனை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஒரு முத்தம்? ஒரு அணைப்பு? இல்லை,
அரட்டை காதல்கள் சத்தியம் செய்திருக்கின்றன
இன்றைய ஒரு நாளுக்காய்
காதல் உடல் விற்கப்பட்டு
காதல் கற்பு அழிக்கப்பட!

விற்பனைகள் அனைத்தும் கடைவிரித்திருக்கின்றன
விலை போட்டு விற்க காதல்கள் காத்திருக்கின்றன
குறைந்த விலைக்கு வாங்கிவிடாதீர்கள்
முறைத்து விடுவாள் காதலியாம்?

குறைந்த விலைக்கு காதல் கிடைக்கவில்லையா?
இலவச காதலுக்காய் காத்திருக்கிறீர்களா?
ஐய்யோ பாவம் காதல் ஏழை!

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

8.375
Your rating: None Average: 8.4 (8 votes)

கருத்துகள்

டணிஸ்கரன்'s படம்

உண்மைக்காதலைக்காண்பதே உலகில்


9

உண்மைக்காதலைக்காண்பதே
உலகில் அருமையாகிவிட்டது
உண்மைக் காதலின்
உண்மை உணராத காதலர்களால்.

உங்கள் கவிவரிகள் ஒரு கனம் என்னைக் கவிதை எழுத அழைத்தது.

நன்றி.
Clap Clap Clap
~இளங்கவி~

vinoth's படம்

நன்றி இளங்கவி


நன்றி இளங்கவி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshini's படம்

you are right Vinoth


9

you are right Vinoth


Dharshini


vinoth's படம்

நன்றி தர்ஷினி


நன்றி தர்ஷினி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

காதலுக்கு விலை பேசி காதலையும்


8

காதலுக்கு விலை பேசி
காதலையும் விற்கின்றார்

காதல் கொண்டவர்களோ
காதில் வாங்குவதில்லை

காதல் பொழுதுபோக்கென்று நினையாதீர்
வாழ்க்கையை தொலைத்தே அலையாதீர்

வஞ்சித்தவர் மனதால் நோக காலம் கடந்துவிட‌
வஞ்சிக்கப்பட்டவரோ மனதுடன் உடலும் நோக‌

காதலென்னும் செயலொரு வாழ்க்கையின் இனிமை
காதலில்லா செயலொரு காய்ந்த சறுகென வாழ்வு

உண்மைக்காதல் உயிரில் கலந்திருக்க தேடும் வாழ்வு
காமக்காதல் உண்மையில் பிரிந்துவாடும் ஏளனச் சிரிப்பில்

காதல் புணிதம் மானிடம் வாழ அறிவீரா
காதலை விலைபேசி விபச்சாரமாக்காதீர்

காதலென்பது காலத்தின் சரித்திரம் சொல்லும் சித்திரம்
அனுபவித்து காதலிக்க நாளை நீயும் ஒருச்சான்று

என்றும்: சுஷ்ருவா

நண்பரே! உமக்கு கருத்தெழுத நினைத்தேன், அது கவிதையென உருபெற்று விளக்கமாகிப் போனது, உமது கவிதைக்கு எனது கவிதைப் பரிசைப் பெற்றுக் கொள்ளுமாறு எனது தாழ்மையான விண்ணப்பம்!

vinoth's படம்

கருத்து கவிதை அருமை நன்றி


கருத்து கவிதை அருமை Smile
நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ponvannan's படம்

காதலுக்கு விலை பேசியவர்களை


8

காதலுக்கு விலை பேசியவர்களை சாடிய வினோத் இக்கவிதை மூலம் தன்னையே விற்றுவிட்டார்.
பொருள் பொதிந்த கவிதை. எல்லோரையும் சிந்திக்க வைக்கும் கவிதை. வாழ்த்துக்கள்.

vinoth's படம்

கருத்திற்கு நன்றி


கருத்திற்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

குறைந்த விலைக்கு காதல்


9

குறைந்த விலைக்கு காதல் கிடைக்கவில்லையா?
இலவச காதலுக்காய் காத்திருக்கிறீர்களா?
ஐய்யோ பாவம் காதல் ஏழை!
என்பன
போலி முகங்களைக் கிழித்த வரிகள்
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil