நட்பாக பழகிய
நாளில் சொன்னாய்..
"காதல் பொய் என்று..!!"
நானும்
"ஆமாம்..காதல் பொய் தான்...!"என்றேன்.
காதலாகி மணமுடித்த பின் ஓர் நாள்..
சட்டை பொத்தானை போட்டபடி
"காதல் வாழ்கையை
அழகாக்குகிறது..!!" என்றாய்.
நானும்...
"ஆமாம் அழகாக்குகிறது..!!"என்றேன்.
நீ சிணுங்கியபடி...
"ஆமாம்" என்பதை தவிர வேறு
எதுவும் சொல்ல மாட்டீர்களா..?
என்றாய்.
சிரித்தபடி சொன்னேன்...
"இல்லை" என்று சொல்லியிருந்தால்
நீ கிடைத்து இருப்பாயா சிணுங்கி..?
என்றதும்
கொட்டினாய் காதலாய்...!!
கருத்துகள்
மிகவும் அருமை நண்பரே...
மிகவும் அருமை நண்பரே...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
கவிதை அருமை...... இன்றைக்கு
கவிதை அருமை......
இன்றைக்கு காதல் பலரின் வாழ்க்கையை அழகாக்குகிறது.....
ஆனால் பலரின் வாழ்க்கையை அழுக்காக்கிறது.....







