காதல் தப்பில்லை
=================
தப்பி்ல்லை காதல்
தப்பில்லை
நடு ரோட்டில்
கடற் கரையில்
இங்கிதம் தெரியாமல்
விற்கப்படும் கற்புகள்
முகம் திருப்பி செல்பவர்கள்
காதல் கோட்டை
காமத்தி்ல் கட்டி
கதவு தாண்டிய கைகளை
கழுவி விடப்பட்டு
விபச்சாரி
ஆக்கப் பட்டவர்கள்
தங்கை தெருவோட
தமக்கையின் திருமணம்
சந்தி சிரித்துப் போனவர்கள்
நேர்கொண்ட பார்வை
நெஞ்சம் நிமிர்த்தி
நடந்து இன்று
நிலை குலைத்து குனிந்து
நடக்க செய்த மகள்
பெற்ற பாவம் செய்தோர்
வாய்வயிற்றில் அடித்து
நெஞ்சம் வெடித்த
அம்மா பிள்ளைகள்
உனைத்தவிர வாழ்க்கையில்லை
காதலில் கலந்த வார்த்தை
மறந்து
தாடி வளர்த்தவர்கள்
இவர்களைத் தவிர
யாருக்கும்
தப்பி்ல்லை காதல்
தப்பில்லை
--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth
கருத்துகள்
நல்ல சிந்தனை
நல்ல சிந்தனை
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி









