vinoth's படம்

காதல் ஜெயம்!!!

காதல் ஜெயம்
==============

பிள்ளை காதலிக்கிறாள்!
பிசைகிறது நெஞ்சு!
ஊர் ஏளனங்கள் கண்முன்!
ஊமையானது வீரம்!

தோற்கப் போவது யார்?
காதலா? காதலர்களா?
காதலனா? காதலியா?
தாயா? தந்தையா?

காதலுக்கு
எதிர்ப்பில்லாத
பெற்றோர்
பிள்ளைகள் வாழ்வை
கெடுக்கிறார்கள்; ஆம்!
கெடுக்கிறார்கள்!

இந்த எதிர்ப்பு காதலின்
எதிர்ப்பு அல்ல!
நீங்கள் கொண்ட
காதலின் ஆழம்
காணும் எதிர்ப்பு!

எதிர்த்தலில்
உதிரவில்லை
உண்மைக் காதல்
ஜெயிக்கும் நாள்
குறித்துக் கொண்டது!

இது உங்கள் காதல் மனதை
இன்னும் இணைத்து இறுக்க
பெற்றோர் வைத்த
எதிர்ப்புப் பொறி!

போராடி கிடைத்தால் தான்
இனிக்கிறது வாழ்க்கை!

போராடி கிடைத்தால் தான்
புரிதல்கள் புரிந்து கொள்ளப்படுகிறது!

போராடி கிடைத்தால் தான்
ஊடல்களில் போராடிய வெற்றி
கூடலுக்கு அழைக்கிறது!

போராடி கிடைத்தால் தான்
காதலின் நீளம்
கொஞ்சம் கூடுகிறது!

போராடி கிடைத்தால் தான்
காதல் கனம் சுகமாகிறது!

பெற்றோர்களே!
நம் பிள்ளைகள்
வாழ்க்கை அல்லவா இது!

காதலுக்கு எதிர்ப்பை காட்டுங்கள்!
காதல்கள் வலுவடையட்டும்!
அவர்கள் வாழ்க்கை இனிக்கட்டும்!
நிஜக்காதலாக இருந்தால்!!!

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

9.25
Your rating: None Average: 9.3 (12 votes)

கருத்துகள்

gnanam02's படம்

அருமை


அருமை

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


annaa's படம்

" காதலுக்கு எதிர்ப்பை


"
காதலுக்கு எதிர்ப்பை காட்டுங்கள்!
காதல்கள் வலுவடையட்டும்!
அவர்கள் வாழ்க்கை இனிக்கட்டும்!
நிஜக்காதலாக இருந்தால்!!!
"
அருமை தோழரே..!!


annaa


vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sithaRam's படம்

நன்று....


நன்று....

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


joshi2010's படம்

மிகவும் அருமையான


மிகவும் அருமையான கவிதை........

என்னைப் பொறுத்த வரை, பெற்றோர்கள் காதலை எதிர்க்காமல், தங்கள் குழந்தைகளுக்கு உண்மைக் காதலையும், காதலனின் / காதலியின் உண்மை முகத்தையும் கண்டுபிடிக்கவும் உதவினாலே போதும்.........

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் காதலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாய‌ திருமணம் செய்து வைத்து, தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்களே படு குழியில் தள்ளிவிடுகின்றனர். (என் தோழியின் அனுபவம் இது தான்)


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


vinoth's படம்

உங்கள் கருத்திற்கும் உடன்


உங்கள் கருத்திற்கும் உடன் படுகிறேன்.

நன்றி

எல்லா காதல்களும் உண்மையானதாக இருப்பதில்லை, ஏமாற்றப்படுபவர்கள் தான் அதிகம், அல்லது பொழுதுபோக்காக நினைப்பவர்களும் அதிகம்.
சிலர் ஏதோ ஒரு உத்வேகத்தில் யோசிக்காமல் காதலித்து வி்ட்டோம், இனி அதை தெய்வீகமாக போற்றவேண்டும் என்ற எண்ணத்திலேயே பெற்றோர்களைக்கூட தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

எப்படியோ நன்றாக இருந்தால் சரி, ஆனால் தேர்ந்தெடுத்தது தவறாகி விட்டால்? கஷ்டம தான்.

தவறுகள் இரண்டு முறைகளிலும் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் பெற்றோர்களாக தேர்ந்தெடுத்து தவறு என்றால் சரிப்படுத்த முயல நிறை பேர் கூட இருப்பார்கள்.
தனிமைப்படுத்தப்படமாட்டோம்.

சொந்தத்தை எதிர்த்து செய்து, காதல் துணையும் கைவிட்டுவிட்டால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

அதே நேரம் இருவழிகளிலும் தவறுகள் ஏற்படும் சரிவிகிதம் காதல்களில் அதிகமாக இருக்கக்காணலாம்.
அதாவது 10 காதல் திருமணங்கள், 10 நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இரண்டிலும் அதிக தவறுவது காதலாகத்தான் இருக்கும்.

பெற்றோர்கள் என்றால் துணை தேர்ந்தெடுப்பதில் முதலில் சுற்றம், குடும்பம், அவர் அம்மா அப்பா குணம் இவைகள் தான் முதலில் பார்ப்பார்கள். அப்புறம்தான் மனப்பொருததம்.
இப்போது எந்த பெற்றோரும் இவ்வாறு துணை பார்த்தாலும் மகளுக்கு அல்லது மகனின் சம்மதத்தையும் கேட்டே செய்கிறார்கள், கட்டாயப்படுத்தப்படுவது அங்கங்கு 1, 2 நடக்கத்தான் செய்கிறது.

எந்த திருமணமாயினும் அவரவற்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பது அவரவர் கடமை அல்லது பெற்றோரின் கடமை.
அதில் வரும் விளைவுகளுக்கும் அவரவர்களே பொறுப்பு.

ஓடுகாலி என்ற வார்த்தை இன்னும் மாற்றப்படலில்லை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...