syedali's படம்


காதலிக்கிறேன் 
அவனும் அவளும் பரிமாறும் 
சொல்லின் முடிவில் இறக்கிறது 
அவர்களின் காதல் 
அவர்கள் 
காதல் செய்கிறார்கள் 
செய்கை பதியும் அடையாளம் 
அவர்களின் அபிநயங்கள் 
பருவங்களில் 
காதல் தளிர்கிரதாம் 
வயதுக்குள் சிறைவைக்கிரார்கள் 
காதல் ஞானமற்றவர்கள் 
 பிஞ்சுக் காதல் 
பருவக் காதல் 
கள்ளக் காதல் 
வயோதிகக் காதல் 
பெயர் அடையாள சுமையில் 
மௌனமாக அழுகிறது காதல் 
மனிதன் 
தத்தம் உறவாடுவதர்காக 
இறைவன் இட்ட பந்தமுடுச்சு 
உறவுகள் 
இறைவனின் 
ஒருதுளிக் கருணைதான் 
 இந்த பூமியின் புன்னகையும் 
மனித நேசமும் 
உருவமற்ற 
இறை அன்பினை 
வயதுகளிலும் பெயரிலும் 
அடையாள படுத்துதல் சரியோ ?


-செய்தாலி 
எல்லா அன்பு உள்ளங்களுக்கும் என் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 

6
Your rating: None Average: 6 (1 vote)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/10/blog-post_25.html

கருத்துகள்

yarlpavanan's படம்

எனது தீபாவளி வாழ்த்துக்கள்


6

எனது தீபாவளி வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil