காதல் - 1
காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்
கனவுக ளிறைத்தல்காண்!
காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
காட்சியாய்த் தெரியுங்காண்!
காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
கருத்தினில் தோன்றுங்காண்!
காதல் கொண்டிடக் கனவுகள் கிளைத்திடக்
கதவுகள் திறக்குங்காண்!
காதல் - 2
காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
கதவுகள் திறக்காதோ!
காதல் கொண்டிடக் கதிரவ னொளியென
கண்களு மொளிராதோ!
காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்
கவிகளும் முளைக்காதோ!
காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்
கனவுகள் இனிக்காதோ!
இப்பா அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய மண்டிலம் வகையைச் சேர்ந்தது..
இது நான் எழுதி பிறகு தமிழறிஞர் ஒருவரால் திருத்தப்பட்டது...
எனவே, பாதி நான் . பாதி அவர்.. நன்றி.. தமிழறிஞர் அவர்களுக்கு...
விளக்கங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.. நன்றி..!!
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010/03/5.html
கருத்துகள்
உன்னோடு வாழ்வதற்கும் உன்
உன்னோடு வாழ்வதற்கும் உன் நினைவுகளோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம் தான் உண்டு
உன்னோடு வாழ்ந்தால் அது வரம்
உன் நினைவுகளோடு வாழ்ந்தால் அது தவம்
வேண்டாம் என்று சொல்லி எனை
வேண்டாம் என்று சொல்லி
எனை விலகி நின்ற
நொடிகளை
நினைத்துப்பார்க்கிறேன்
இல்லை என்று சொல்லி
இதயத்தின் இயக்கம்
நிறுத்திய கணங்களை
நினைத்துப்பார்க்கிறேன்
வலிக்கவே இல்லையே ????
இன்னுமா - நீ
என் மீது கொண்ட
அந்த ஏதோ ஒன்று
உயிரோடு இருக்கிறது
மிகவும் எளிமையான தமிழில்
மிகவும் எளிமையான தமிழில் உள்ளது.
சந்துரு
நல்லா இருக்கு தொடருங்கள்
நல்லா இருக்கு தொடருங்கள் உங்கள் பணியை...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
"காதல் கொண்டிடக் காண்பவை
"காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
காட்சியாய்த் தெரியுங்காண்!
காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
கருத்தினில் தோன்றுங்காண்!"
மிகவும் அருமையான வரிகள்............ காதல் கொள்ளும் போது மனிதனும் மகாதமாவாக மாற முடியும்.......
இதனைத் தான் " காதலி தன் கடைக்கண் காட்டி விட்டால், இமயமும் கடுகளவாம்" என்பதோ........








