amazysara's படம்

காதலும் கைபேசியும்..2

எப்போதும்
என் குறுஞ்செய்திகளின் குலதெய்வம்
நீதானடி..
அனுப்பிய அனைத்தும் ஒன்றுகூடி
உனக்காக "தேர்" இழுத்தாலும்
ஆச்சர்யமில்லை..!!
********************************************
"இனிய இரவு" என்று தினமும்
குறும்செய்தி அனுப்புகிறாய் அப்பாவி போல...
இனியவள் நீயில்லாத
இரவு எப்படி
"இனிய இரவாக" முடியும்..?
*******************************************
ரகசியம் இதுதான்...
என் கைபேசிக்கு
எஸ்.எம்.எஸ் பூஸ்டர்....
என் கைபேசியில் இருக்கும்
உன் புகைப்படம் மட்டுமே
என் பூஸ்டர்...!!
******************************************
நீ...
என் கைபேசி
எண்ணைகூட அழித்து விட்டாய்...!!

உன் "போடா" என்ற
ஒரு வார்த்தை "எஸ்.எம்.எஸ்"கூட
அப்படியே இருக்கிறது
கைபேசியை அழகாக்கி...
கண்ணில் ஈரமாக்கி...!!
*******************************************
அழகி...
நீயும் என் காதலுக்கு
சைலன்ட் மோடு...!!
அதிரும்...
உன் கைபேசியும்
என் குறுஞ்செய்திக்கு
சைலன்ட் மோடு..!!

5.75
Your rating: None Average: 5.8 (4 votes)

கருத்துகள்

kumaran's படம்

(No subject)


6

Sad


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

எல்லாக்கவிதைகளும் அழகு....


7

எல்லாக்கவிதைகளும் அழகு....


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


saravanamuthu's படம்

(No subject)


4

Clap

Ragavan's படம்

அத்தனையுமே மிக அருமை


6

அத்தனையுமே மிக அருமை நண்பரே... Clap Clap Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..