குறும்பி நீ
குறுஞ்செய்தி அனுப்புகிறாயா...?
இல்லை...
குறும்பு கனவுகளை அனுப்புகிறாயா...?!
சிலிர்க்கிறது...
ஒவ்வொரு இரவும்...!!
***********************************************
ரயில் கண்டால்...,
கையசைக்கும் எல்லா குழந்தைகளும் ...!!
மயிலே
உன் "எஸ்.எம்.எஸ்" கண்டால்
என் எல்லா அணுக்களுக்குள்ளும்
ஒரு குட்டி ரயிலே ஓடும்..!!
*************************************************
"எஸ்.எம்.எஸ்" அனுப்பி
எழுத்து தேய்ந்த கைபேசிதான்
நம்
குழந்தைக்கு விளையாட்டு பொருள்
இப்பொழுதெல்லாம்...!!
கருத்துகள்

"எஸ்.எம்.எஸ்" அனுப்பி எழுத்து
"எஸ்.எம்.எஸ்" அனுப்பி
எழுத்து தேய்ந்த கைபேசிதான்
நம்
குழந்தைக்கு விளையாட்டு பொருள்
இப்பொழுதெல்லாம்...!!
its tooooooooooooooo good
தற்போதைய நிலையைக்
தற்போதைய நிலையைக் கூறியிருக்கிறீர்கள்.....
நன்று... 
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








