எனக்காய்…
எத்தனை அன்புள்ளங்கள்
வாழ்த்த காத்திருந்தன
வரிசையில்..
பின்னிரவு 12 மணிக்கு..
என்னவள் எனை அழைப்பாள்.
முதல் குரலாய், முத்தமிட்டு வாழ்த்து சொல்லி
மகிழ்விப்பாள் என்றெண்ணி எதிர்ப்பார்த்தேன்.
12 மணிக்கு பத்துநிமிடம்
முன்னே-முன்னாள் காதலி
முந்திக்கொண்டாள்..வாழ்த்தி விட்டாயே
வைத்து விடு போனை என்றேன்..
முடியாது என்னால்..
முதல் குரல்,என் குரல் தான்
உன்னை வாழ்த்தும்..
காத்திரு கண்ணா..
காலம் தாழ்த்தி வந்ததால் தானே -எனை
கழட்டிவிட்டு-இந்நாள் காதலியாய்
இன்னொருத்திக்கு இடம் தந்தாய்.
-எமை மறந்தாய் என்றாள்.
12 மணியும் ஆனது..முன்னாள் காதலி
பிறந்தநாள் நல்வாழ்த் தென்றாள்.
இரண்டாம் அழைப்பாய்..இந்நாள் காதலி.
முன்னாள் காதலியிடம் மொக்கை போட்டாயா?பொறுக்கி ராஸ்கல்..
வாழ்த்தாய் முதல் பரிசு..வசையாய் இரண்டாம் பரிசு..
கருத்துகள்
அடிக்கடி ஆள்மாத்துவதும்
அடிக்கடி ஆள்மாத்துவதும் காதலா...?? 
உங்களிற்கு பிறந்தநாள் வாழ்த்து
அன்புடன்
பாலன்
முன்னாள் , இந்நாள், வரும்
முன்னாள் , இந்நாள், வரும் நாள் யாரோ?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/







